இணையத்தளங்கள் ஊடாக கொள்வனது செய்யப்படுகின்ற பொருட்கள் சேவைகளுக்கும் வரி விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
இதன்போது ஒன்லைன் ஊடாக கொள்வனவு செய்யப்படுகின்ற பொருட்கள் மீது இவ்வளவு காலமாக வரிவிதிக்கப்படவில்லை என்றும், ஆனால் இனி வரி விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.