சுற்றுலா

எகுவா பியரல் லேக் ரீசோட்

பொல்கொட வாவி என்றால் மேல் மாகாணத்தில் தெரியாதவர்களே இல்லை. இந்த வாவி களுத்துறை மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியுள்ளது.  இந்த வாவியின் ஒரு பகுதி கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் எல்லையான மொறட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ளது.

இலங்கையிலுள்ள மிகப் பெரிய இயற்கை வாவி போல்கொட வாவியேயாகும். இந்த வாவியினை சுற்றி பல ஹோட்டல்களும் 

ரீசோட்களும் உள்ளன.இவற்றுக்கு மத்தியிலேயே மிக பழமை வந்த எகுவா பியரல் லேக் ரீசோட் உள்ளது. இந்த ரீசோட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் 50 சதவீதமான பரப்பு பொல்கொட வாவினை அவதானித்தவாறு உள்ளமையாகும்.

அதாவது சுமார் 24 ஏக்கர் காணியில் 1985ஆம் நிர்மாணிக்கப்பட்ட எகுவா பியரல் லேக் ரீசோட் அமைந்துள்ளது. இந்த ரீசோட்டின் 50 சதவீதமான பரப்பு போல்கொட வாவியை அவதானித்தவாறே உள்ளது.கொழும்பு நகரிலிருந்து சுமார் 40 நிமிட பயண தூரத்தில் பழைய காலி வீதியின் கொரக்கொண மொரட்டுவை எனும் பிரதேசத்தில் இயற்கை மரங்களுக்கு மத்தியில் இந்த ரீசோட் உள்ளது.

20 அறைகள், இரண்டு திருமண மண்டபம், ஒரு மாநாட்டு மண்டபம், நீச்சல் தடாகம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றினை இந்த ரீசோர்ட் கொண்டுள்ளது.இங்குள்ள அறைகளில் 10 பொதுவன அறைகளும் 10 விசேட அறைகளும் உள்ளன. விசேட அறைகளை கோட்டேஜ் என்று அழைப்பர்.

கோட்டேஜ் வகையான அறைகள் தனித் தனியாக அமையப் பெற்றுள்ளன. அத்துடன் இந்த கோட்டேஜ் அறைகள் போல்கொட வாவியினை நோக்கி அமையப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்ற வகையில் இந்த கோட்டேஜ் அறைகள் விசேடமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த அறைகளில் தொலைக்காட்சி, குளிரூட்டி உள்ளிட் பல சேவைகள் உள்ளன.

இதற்கு மேலதிகமாக வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அறைகளில் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். மாலை 3.30 நண்பகல் 1.30 வரையும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என அறை நேரங்கள் இங்கு உள்ளன.இங்குள்ள பாரிய நீச்சல் தடாகத்தினையொட்டியவாறு சிறுவர்களுக்கான நீச்சல் தடாகமும் உள்ளது. இதற்கு மேலதிமாக இரண்டு திருமண மண்டபங்கள் உள்ளன. சுமார் 2,000 பேரை கொள்ளக்கூடிய வகையிலேயே இந்த இரண்டு மண்டபங்களும் உள்ளன.

இந்த மண்டபங்களில் திருமணங்கள் மற்றும் விழாக்கள் இடம்பெறுவது வழமையாகும். இங்கு திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இலவசமாக மேற்கொள்ள முடியும். புதுமணத் தம்பதிகள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு ஏற்ற வகையில் தோட்டமொன்று இந்த ரீசோடில் உள்ளது. இந்த தோட்டத்தில் அதிகமான புதுமணத் தம்பதிகள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் 50 பேர் அமரக்கூடிய வகையிலான மாநாட்டு மண்டபமொன்றும் உள்ளது. அலுவலகங்கள் மற்றும் அமைப்புக்களின் கூட்டங்கள் பயிற்சி பட்டறைகள் இடம்பெறக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் இந்த மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரீசோட்டிற்கு வரும் சுற்றுல்லா பயணிகளுக்கு மேற்கத்தேய மற்றும் கீழைத்தேய உணவுகள் பறிமாற்றப்படுகின்றன. ஒரே தடவையில் 350 பேர் அமரக்கூடிய வகையில் உணவகம் அமையப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஹலால் அங்கீகாரம் பெறப்பட்ட உணவுகளே பறிமாற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேபோன்று வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தேவையான விதத்தில் தனி நிகழ்வுகள் ஹோட்டேலில் தனியான பிரதேசத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. இதன்போது உணவும் மதுபானமும்  வழங்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கள புது வருடம், கிறிஸ்மஸ் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு ஏற்ற வகையிலும் அலுவலகங்களினால் மேற்கொள்ளப்படும் சுற்றுலாவிற்கு ஏற்ற வகையிலான வசதிகள் இந்த ரீசோர்ட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வாவியினை அண்டியதாக இந்த ரீசேர்ட் உள்ளமையினால் படகுப் பயணத்திற்கு இந்த ஹோட்டேல் பிரபல்யம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு நியாயமான கட்டணங்களே வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிடுகின்றனர். அத்துடன் குறி பார்த்து சுடும் போட்டியில் ஈடுபடுவதற்கும் இங்கு வசதிகள் உண்டு.இதற்காக விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்கள் இங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிரிக்கெட் மற்றும் வலைபந்து போட்டிகளில் ஈடுபடக்கூடிய வகையிலான மைதானமும் உள்ளது.

இதனால் குழுவாக வருகின்றவர்கள் சுற்றுப்போட்டிகளை ஏற்பாடு செய்வது வழமையாகும். அத்துடன் அலுலவகங்களிலிருந்த வருபவர்கள் கோரிக்கை விடுத்தால் தலைமைத்துவ, தீர்மானமெடுத்தல், முகாமைத்துவ முரண்பாடு, குழு உருவாக்கம் போன்றவற்றிற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இதற்காக தொழில் வாண்மை வளவாளர்கள் இங்குள்ளதுடன் இந்த பயிற்சிகளுக்கான பிரத்தியோக வசதிகளும் இங்கு காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக ஒரு நாள் சுற்றுலா மேற்கொண்டு வருபவர்களுக்கும் விசேட பொதிகள் இங்குள்ளன.

தேவையான வசதிகளின் அடிப்படையில் பொதிகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். இந்த பொதியில் வரவேற்பு குளிர்பானம். பகலுணவு, மாலை நேர தேநீர் ஆகியன அடங்குகின்றன.இதற்கு ஏற்றவகையிலேயே இந்த ஹோட்டேல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா பிரயாணிகளின் நலன் கருதி ஆயுர்வேத நிலையமொன்று இங்கு உள்ளது.

இந்த நிலையம் அண்மையிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த வைத்தியர் மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களினாலே இந்த ஆயுர்வேத நிலையத்தில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.குறிப்பாக பஞ்சகர்ம, சிரோதாரன், சர்வங்கதார ஆயுர்தேவ சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு பல முக்கிய அம்சங்களை கொண்ட இந்த ரீசோடிற்கு நாம் ஒரு முறை விஜயம் செய்வதில்லையா?

வார இறுதி நாட்களை கழிப்பதற்கு மிகச் சிறந்த இடமாக இந்த ரீசோர்ட் உள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் இந்த ரீசோர்டிற்கு அதிக கிராக்கியாகும்.தற்போது 2014ஆம் ஆண்டு புது வருடம் பிறந்துள்ள நிலையில் எமது வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு இந்த ரீசோர்டிற்கு விஜயம் செய்ய முடியுமல்லவா.

0382232960 அல்லது 0114376363 அல்லது 011522687 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் aquapearl@sltnet.lk என்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக இந்த ஹோட்டேலை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடிவதுடன் உங்கள் பதிவுகளையும் முன்கூட்டி பதிவுசெய்துகொள்ள முடியும்.

Related posts

’எழில்மிகு ஹிரிவடுன்ன’

அம்மு

’பின்னவல சரணாலயம்’ செல்வோம்!

அம்மு

“கொழும்பு தேசிய நூதனசாலை” சுற்றி பார்க்கலாம்

அம்மு