சுற்றுலா

வில்பத்து வன பிரதேசத்தில் உள்ள குதிரை மலை

வில்பத்து வன பிரதேசத்தில் காணப்;படும் குதிரை மலை பகுதி பண்டைய காலம் முதல் கடல் பயணிகளுக்கு நன்கு தெரியக்கூடிய அடையாளமாகவும் தொல்பொருள் பெறுமதிமிக்க இடமாகவும் காணப்படுகின்றது.

தற்போது நாட்டில் நிலவும் சாதகமான சூழ்நிலையில் வனஜீவராசி தினைக்களத்தின் அனுமதியுடனும் வழிகாட்டலுடனும் இந்த மலைப் பகுதியினை பார்க்க வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுல்லா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த மலைப்பகுதி வில்பத்து வனத்திற்குள் காணப்படுவதினால் குதிரை மலையினை பார்வையிட செல்லும் வழியில் மான், யானை, ஊர்வன வகைகள், பறவைகள் என பல உயரினங்களை பார்வையிடும் சந்தர்ப்பமும் உள்ளது. இது போன்று குதிரை மலைக்கு செல்லும் வழியில் பாலைப்பழம் மற்றும் வீரப்பழம் என்பனவற்றுடன் மூலிகை தாவரங்கள் பலவற்றினையும், இயற்கையாக அமையப்பெற்றுள்ள இரண்டு வில்லுகளினையும் அவதானிக்கலாம்.

இந்த மலைப் பகுதியில் காணப்படும் மட்பாண்ட சிதைவுகள், சுட்ட செங்கள்கள் என்பன மொசோலினி காலம் முதல் இப்பகுதயில் குடியிருப்புக்கள் இருந்ததினை உறுதிப்படுத்துகின்றன. கி.மு. 543 காலப்பகுதிகளில் விஜயனும், அவனது தோழர்களும் இந்த மலைப்பகுதியில் கரையிறங்கி செப்பு நிற மண் உடைய கரையை கண்டு ‘தம்பபண்ணி’ என அழைத்ததாக செவிவழி சரித்திரம் கூறுகின்றது.

மேலும் உள்நாட்டு இயக்க கோத்திரத்து அரசியாகிய குவேனி இதற்கு அண்மையிலுள்ள ‘காளிவில்லு’ அதாவது இன்றைய வில்பத்து பகுதியில் வாழ்ந்து வந்தது விஜயனின் துணைவியாக இருந்ததாகவும் சிதைவுகளிலிருந்து தெரியவருகின்றது.

இது போன்று இன்னுமொரு செவிவழி சரித்திரத்திற்கேற்ப குதிரை மலைப்பகுதியில் அல்லிராணி ஆட்சி செய்ததாகவும் அவள் முத்துக்கள் மீது அதிகம் விருப்பம் கொண்டிருந்ததோடு அரேபிய வர்த்தகர்களுக்கு குதிரைகளுக்கு பதிலாக முத்து பண்டமாற்று வர்த்தகத்தை இந்த குதிரைமலை துறையில் மேற்கொண்டுள்ளார்.

ஆகையால் இதற்கு குதிரை மலை என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. குதிரைமலை குன்றில் வடக்கு நோக்கி செல்லும் போது பண்டைய இந்து கோவில் சிதைவுகள் காணப்படுகின்றன.

35 அடி உயரமான வானத்தினை நோக்கி கால்களை உயர்த்திக் கொண்டிருந்த மனிதனுடைய சிலையின் சிதைவுகள் என்றும் கூறப்படுகின்றது. இதற்கு அண்மையில் கடற்கரையினை அண்மித்து முஸ்லிம் ஒருவரின் அடக்கஸ்தலத்தையும் காண முடியும்.

இந்த மலைப்பகுதியின் தூரத்தில் தெரிகின்றன தீவுகளான பத்தலங்குண்டு மற்றும் பள்ளிவாசல் தீவுகள் கருவாடு வியாபாரத்துக்கு பிரசித்தி பெற்றதாகும். இந்த மலை பகுதியிலிருந்து கடலினை பார்க்கும் செங்குத்தாகவும், நூற்றுக்கணக்கான அடிகள் ஆழமானதாகவும் காணப்படுகின்றது. இதனால் மக்களின் நலன்கருதி மலையின் விளிம்பு பகுதியில் கயிற்றினால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று குதிரை மலை பகுதியில் காணப்படும் காடுகள் குட்டையாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். மலைப்பகுதியின் மரங்களுக்கிடையில் அங்கு செல்பவர்கள் இளைப்பாறுவதற்கென இயற்கையாகவே சில இடங்கள் அமையப்பெற்றுள்ளமையும் செப்பு நிற மண்னும் இம் மலைப்பகுதியின் அழகினை மேலும் அதிகரிக்கின்றது.

மேலும் சுற்றுலா சொல்ல கூடிய இடம் பற்றி அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Travel Facebook :- Liked

Travel Facebook Group :- Joined

Travel Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வசந்த காலத்தில், வாருங்கள் நுவரெலியாவுக்குச் செல்வோம்!

அம்மு

பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் ஜம்புகோளப்பட்டினம்

அம்மு

பண்ணைக்கு வாங்க…

அம்மு