14.7 C
Manchester
5 July 2022
Image default
இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்த பாம்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நேற்று நாகப் பாம்பு ஒன்று நுழைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்கள் பெரும் முயற்சிகளுக்கு பின்னர் பாம்பை பாதுகாப்பாக பிடித்து ஒரு போத்தலில் அடைத்ததாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் தலைமை செவிலியர் புஷ்பா ரம்யானி டி சோய்சா தெரிவித்தார்.

அதனி தொடர்ந்து, பாம்பு சுவாசிப்பதற்கு ஏதுவாக போத்தலில் சிறு துளைகள் இட்டோம். அதன்பிறகு விலங்குகளைப் பெற சம்பந்தப்பட்டோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினோம்.

எனினும் யாரும் முன்வராத காரணத்தினால் இறுதியில் எங்கள் நண்பர் ஒருவர் பாம்பை ஒரு காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை வைத்தியசாலையில் பூனைகள் உள்ளிட்ட பிற விலங்குகள் இதற்கு முன்னர் தோன்றியிருந்தாலும், நாகப் பாம்பு தோன்றியது இதுவே முதன் முறை என்றும் புஷ்பா ரம்யானி டி சோய்சா சுட்டிக்காட்டினார்.

Related posts

இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கதி

SudarSeithy

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை: பொலிஸில் சரணடைந்த நபர்

SudarSeithy

கடும் சரிவில் தங்கம் விலை!

SudarSeithy