14.7 C
Manchester
5 July 2022
Image default
இலங்கை

விபத்தினால் 24 மணித்தியாலங்களில் 9 பேர் உயிரிழப்பு

நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்றும், மேலும் இருவர் பாதசாரிகள் என்பதுடன் எஞ்சிய நபர் முச்சக்கரவண்டியில் பயணித்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சிறிய ரக வாகனங்களிலும் வீதிகளில் செல்பவர்களும் வாகன விபத்துக்களில் அதிகளவில் உயிரிழக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை வியாழனன்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்..

இந்த நிலையில் விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்காக போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

2021 வாக்காளர் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட மாட்டாது

SudarSeithy

கொழும்பில் பரபரப்பு ஏற்படுத்திய இளம் பெண்ணின் மரணம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

SudarSeithy

யாழில் லட்சங்களை செலவழித்து ஆரம்பமான திட்டம் நாசமாகும் நிலையில்!

SudarSeithy