14.7 C
Manchester
5 July 2022
Image default
இலங்கை

உயிரிழந்த மலையக சிறுமி குறித்து தாய், தந்தையர் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து உயிரிழந்த சிறுமி பணிப்பெண்ணாக செல்ல வேண்டிய நிலைமை குறித்து, சிறுமியின் தாய், தந்தையர் பரபரப்பு தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

தவலாக்கலை, டயகம மேற்கில் வசிக்கும் ஜெயராஜ் ஜூட் குமார்- ராஜமணிக்கம் ரஞ்சனியின் மூன்றாவது மகள் இஷாலினி.

அந்த தம்பதியினருக்கு 6 பிள்ளைகள். மூத்த மகன் பிரசாத்திற்கு 21 வயது, இரண்டாவது மகள் விதுனிஷாவிற்கு 19 வயது, மூன்றாவது மகள் இஷாலினி இறக்கும் போது 16 வயது, நான்காவது ஜானித்சரின், 13 வயது; ஐந்தாவது ஜூலித் சேத்ரின் 07 வயது , ஆறாவது பிள்ளைக்கு 2 வயது.

இசாலினி 7 வயது வரை அவிசாவளையில், சி. சி. தமிழ் மகா வித்யாலயத்தில் கல்வி கற்றார். “கொரோனா வருவதற்கு முன்பு, என் கணவரும் எனது மகனும் கொழும்பில் வேலை செய்தனர்.

கொரோனாவினால் நாடுமூடப்பட்டதும், என் கணவரும் மகனும் வேலையிழந்து “பணமில்லாததால் எஸ்டேட்டில் வட்டிக்கு பணம் கொடுப்பவரிடமிருந்து ரூ .30,000 பெற்றோம். அந்த பணத்த குறிப்பிட்ட தவணையில் செலுத்த முடியவில்லை. இது ரூ .80,000 ஆக உயர்ந்து விட்டது. பணத்தை கொடுக்க முடியாத நிலையில், வட்டிக்காரர் தினமும் வீட்டின் முன் வந்து கத்த ஆரம்பித்தார்.

கடனை அடைப்பதற்காக சிறுமி இஷாலியின் பணிப்பெண்ணாக ரிசாட் விட்டுக்கு செல்ல விருப்பியுள்ளார்.

ஆனால், நானும் கணவரும் அதை விரும்பவில்லை. தான் பணிப்பெண்ணாக செல்வதாகவும், சம்பள பணத்தின் மூலம் கடனை அடைத்து, வீட்டுக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்குமாறு இஷாலினி கூறினார். தனது மகள் ரிஷாத் வீட்டிலிருந்து வெளியேறி விட்டதாக கூறி, இஷாலினியை சங்கர் அழைத்து சென்றார்.

கொரோனா காரணமாக இஷாலினியுடன் யாரும் செல்ல முடியாது, ஒவ்வொரு மாத சம்பளத்தையும் பெற்றுத்தருவேன் என்றார். மகள் சென்று ஒரு வாரத்திற்குள் தொலைபேசியில் பேசினாள். அந்த வீட்டில் ஒரு தம்பி வேலை செய்கிறான். அவர் தனது தொலைபேசியிலிருந்து அழைத்தார்.

சனிக்கிழமைகளில் 7.00 முதல் 8.00 மணிக்கிடையில் சுமார் 5 நிமிடங்கள் பேசுவோம். நாங்கள் முதலில் பேசிய அன்று, வேலையிடம் எப்படி என்று கேட்டோம். எந்த குழப்பமும் இல்லை என்று மகள் சொன்னாள். தரகர் சங்கர் 10-15 நாட்களிற்கு முன் என்னுடன் பேசினார்.

மேடம் (ரிஷாத்தின் மனைவி) என்னை தொலைபேசியில் பேசும்படி கூறியதாக சொன்னார். நான் அந்த தம்பியின் தொலைபேசிக்கு அழைத்தேன்.தன்னால் அந்த வீட்டில் இனியும் வேலை செய்ய முடியாது, தன்னை அழைத்து செல்லுங்கள் என மகள் கூறினாள். ஏன் என்று கேட்டேன்.

அங்கு வேலை செய்யும் இளைஞன் தன்னை விளக்குமாறினால் அடிப்பதாக சொன்னார். அமைச்சரின் உறவினர் ஒருவரால் மகளுக்கு அன்பளிப்பாக ரூ. 5000 வழங்கப்பட்டிருந்தது. எனது மகள் அந்த வீட்டிலிருந்து 5,000 ரூபா திருடியதாக அந்த தம்பி கூறினார்.

என் பேச்சை மேடத்தின் தாய், துப்பரவு செய்பவர் உள்ளிட்டவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை உணர்ந்தேன். பின்னர், துப்பரவில் ஈடுபடுபவர் மகளிடமிருந்து தொலைபேசிய பறித்து, மேடம் என் மகளை அறைந்ததாகவும், அவரை எனது மகள் எதிர்த்து பேசியதாகவும், அவரை எப்படி எதிர்த்து பேசலாமென மகளிடம் கேளுங்கள் என்றும் சொன்னார்.

அப்போது மேடம், மகள் வேலை செய்வதில்லையென்றார். நான் 21 ஆம் திகதி அ்ந்த வீட்டுக்கு வேலைக்கு வருவேன், அதுவைரை பொறுத்துக் கொள்ளும்படி சொன்னேன்.

ஆனால் லொக் டவுனால் என்னால் செல்ல முடியவில்லை. பின்னர் நான் 27 ஆம் திகதி வெளியேற முயற்சித்தேன்.ஆனால் முடியவில்லை. பின்னர் ஜூலை 7 ஆம் திகதி நான் கொழும்புக்குச் செல்வேன் என்று சொன்னேன். மகளுக்கு ரூ. 25,000 சம்பளம். தற்போது ரூ.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேடமின் தாய் என் மகளுக்கு அணிய 3 ஆடைகளை கொடுத்திருந்தார். இந்த சம்பவம் 3 ஆம் திகதி காலை 6.40 மணியளவில் நடந்தது. அன்று காலை 7.00 மணியளவில் மேடம், சங்கருக்கு தகவல் சொல்லியுள்ளார்.

ஆனால் அண்ணன் சங்கர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. மாலை 3.00 மணியளவில் பொரளை போலீஸார் அழைத்து எங்கள் மகளின் பெயரைக் கேட்டனர். அவர்கள் எம்மை விரைவில் வரச் சொன்னார்கள்.

பின்னர் நான் சங்கர் அய்யாவுடன் பேசியபோது, நாங்கள் ஒரு வேனை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்வோம், மேடம் வேனுக்கு பணம் செலுத்துகிறார் என்றார். மகன் அவிசாவளையில் வேலை செய்து கொண்டிருந்தார்.

நானும், கணவரும், அவரும் கொழும்பு சென்றோம். நேரமாக மேடத்திடமே சென்றோம். நடந்த சம்பவத்தை அவர் எமக்கு சொன்னார். சம்பவம் நடந்த போது மகள் சில்க் ஆடையொன்று அணிந்திருந்தாள். மேடம் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். மகள் தீ வைத்த பின் கத்திய சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்தார்.

அந்த நேரத்தில், மகள் தீப்பிடித்த நிலையில்,வீட்டுக்குள் ஓடி வந்தள். மேடமின் தந்தை ஒரு கம்பளத்தை எடுத்து மகளின் உடலில் வைத்து தீயை அணைத்தார். அப்போது அவள் வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியில் இறங்கி ஐஸ் தண்ணீர் கேட்டதாகக் கூறினார்.

மேடம் உடனடியாக அம்யூலன்ஸிற்கு அறிவித்தார். அம்யூலன்ஸ் வந்ததும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாள். மருத்துவமனையில் என் மகள் போலீசாருடன் பேசியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​மருத்துவமனையில் இருந்தவர்கள் என்னிடம் சொன்னார்கள், மகள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அரை மணி நேரத்திற்குள் இயந்திரத்தில் வைக்கப்பட்டதாக. என்ன நடந்தது என்று எனக்கு புரியவில்லை.

என் மகள் தீ மற்றும் சிறிய சத்தங்களிற்கு பயப்படுபவள். அவளுக்கு என்ன ஆனது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இது ஒரு கனவு போன்றது என்றார். “கொழும்பு பொலிசார் வந்து என் மகள் மற்றும் என் மூத்த மகள் பற்றி எங்களிடம் நிறைய கேட்கிறார்கள்.

இங்குள்ள எங்கள் மகளுக்கு ஏதாவது நடந்ததா என்று அவர்கள் எங்களிடம் கேட்கிறார்கள். கொழும்பில் எங்கள் மகளிற்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றே நாம் கேட்கிறோம்.

ஏனென்றால் நீதியும் நியாயமும் எங்களுக்கு வேண்டும். என் மகள் வறுமை காரணமாக இந்த துரதிர்ஷ்டவசமான விதியை அனுபவித்தாள். அதனால்தான் என் மகளை வேலைக்கு அனுப்பினேன். என் மகளுக்கு ஏற்பட்ட கஷ்டம் வேறு எந்த ஏழைக் குழந்தைக்கும் ஏற்படக் கூடாது என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்“ என்றார்.

Related posts

சிங்கம் போல் இருந்த சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்குச் சென்றுள்ளனர்!

SudarSeithy

சுமந்திரனுக்கு ஜனாதிபதி கோட்டாபய அனுப்பிய குறுஞ்செய்தி!

SudarSeithy

60 லட்சத்துடன் சுவிட்சர்லாந்து சென்றவரை தேடும் கிளிநொச்சி முக்கியஸ்தர்!

SudarSeithy