14.7 C
Manchester
5 July 2022
Image default
உலகம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உலகின் சிறந்த முதல் வகுப்பு விமான சேவை விருதை தட்டி சென்றது!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த முதல் வகுப்பு விமான சேவை விருதை (Best First Class Award) பெறுகிறது.

இந்த விருதினை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வென்றதில் ஆச்சரியமில்லை என்றும், எப்போதும் முதல் தர விமானமாகவே உள்ளதாகவும் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான பாதுகாப்பு மற்றும் தயாரீப்பு மதிப்பீட்டு நிறுவனமான ஏர்லைன்ஸ்ரேட்டிங்க்ஸ்.காம் (airlineratings.com) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முதல் 20 விமானங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான உலகின் மிக சிறந்த 20 விமானங்களின் பட்டியலையும் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமானங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் Singapore Airlines ஆசியாவின் சிறந்த லாங் ஹால் விமான நிறுவனமாகவும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் கத்தார் ஏர்வேஸ் சிறந்த வணிகம்,சிறந்த கேட்டரிங் விருதுகளையும் பெற்றுள்ளது.

ஏர் நியூசிலாந்து (Air Newzeland) இந்த வருடம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஏர் நியூசிலாந்து முதலிடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடதக்கது.

Related posts

கனடாவில் வாழ்வதால் மட்டுமே தங்களுக்கு கனேடிய குடியுரிமை இருப்பதாக தவறாக புரிந்துகொள்ளும் சிலர்: ஒரு விளக்கச் செய்தி

SudarSeithy

ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் நியமனம்

SudarSeithy

போர்களத்தில் தேனிலவைக் கழிக்கும் உக்ரேனிய தம்பதிகள்! உலக நாடுகளிடம் விடுத்த உருக்கமான கோரிக்கை

SudarSeithy