13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

யாழ்.அராலியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்; ஆட்டோ ஒன்று தீக்கிரை

யாழ்.அராலி வடக்கில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றய தினம் இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்று இரும்புக் கம்பிகளுடன் வந்த நால்வர் வீட்டு ஜன்னலின் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் கண்ணாடியினை உடைத்து முச்சக்கரவண்டிக்கு தீ மூட்டியுள்ளனர்.

வீட்டில் உள்ளவர்கள் தூக்கத்தில் இருந்தவேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து விழித்துக்கொண்ட வீட்டுக்காரர்களும் அயல்வீட்டினரும் துரத்தியவேளை அவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

யொஹானியின் பாடலை பாரியாருடன் ரசித்த ஜனாதிபதி!

SudarSeithy

இலங்கையை வாங்க எலான் மஸ்குக்கு ஆலோசனை

SudarSeithy

கடன் நெருக்கடி: இலங்கை ஏற்பட்டுள்ள அபாயம்!

SudarSeithy