14.8 C
Manchester
3 July 2022
Image default
உலகம்

உலகில் மிகவும் அதிக விலை கொண்ட ஐஸ்கிரீம் ; 840 அமெரிக்க டொலர்தானாம்!

டுபாயில் உள்ள ஸ்கூப்பி கபே என்ற நிறுவனத்தில் அண்மையில் “பிளாக் டைமண்ட்” என்ற ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர்.

இதன் விலை 840 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாவில் 1 லட்சத்து 67ஆயிரம், இந்திய ரூபாவில் 60 ஆயிரம் ).

இந்த ஐஸ்கிரீமிற்கு இந்த விலை வந்ததற்கு முக்கியமான காரணம் இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தான் என சொல்லப்படுகின்றது.

இந்த ஐஸ்கிரீமில் 23 கேரட் தங்க இழைகள், சாப்ரான், பிளாக் ட்ரூபிள் ஆகிய பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஐஸ்கிரீம் வெர்சேஸ் வகை பவுலில் பரிமாறப்படுகிறது.

அத்துடன் இதனை உட்கொள்வதற்கு வெள்ளி ஸ்பூன் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ஐஸ்கிரீமை சுவைத்த இந்திய நடிகை ஸூனாஸ் டிரஸரிவாலா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Related posts

Coffee Cupsகளில் கைக்குண்டு; ஆயுதப்பற்றாக்குறையில் உள்ளதா ரஷ்யா!

SudarSeithy

கருங்கடலில் ரஷ்ய கப்பலை தாக்கிய உக்ரைன்!

SudarSeithy

பெண் உறுப்பினர் அருகிலேயே நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.!

SudarSeithy