13.8 C
Manchester
27 June 2022
Image default
தொழில்நுட்பம்

WhatsApp Video Callல் புதிய அம்சம்: இது சூப்பரா இருக்கே

வாட்ஸ் அப்பை பயன்படுத்தாத நபர்களை காண்பது அரிது என்றளவுக்கு இன்றைய இளசுகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் அந்நிறுவனமும் புதுப்புது அம்சங்களை உட்புகுத்தி வருகிறது, ஒரே சமயத்தில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை நான்கு சாதனங்களில் பயன்படுத்தும் அம்சம்,

மெசெஜ்களை மறைய வைக்கும் disappearing mode, ஒருவருக்கு போட்டோ அல்லது வீடியோ அனுப்பினால் அதை ஒருமுறை மட்டுமே பார்க்கும் view once என மொத்தமாக 3 அம்சங்கள் டெஸ்டிங்கில் உள்ளன.

இந்நிலையில் வீடியோ காலில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி குரூப் வீடியோ கால் ஆரம்பித்த பிறகும் கூட நீங்கள் அந்த குரூப் காலுடன் இணையலாம்.

வாய்ஸ் குரூப் காலிலும் இதே வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. முன்பு ஆரம்பத்தில் யாரெல்லாம் வீடியோ காலில் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பேச முடியும். புதிதாக ஒருவரை இணைக்க முடியாது.

ஆனால் இனி புதிதாக ஒருவரை இணைக்கலாம். அதேபோல பாதியில் வெளியேறி பின் மீண்டும் காலில் இணையலாம். ஏற்கெனவே 8 பேர் வரை இதில் கலந்துகொள்ளும் வசதியை வாட்ஸ்அப் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி: குஷியில் நடுத்தர மக்கள்

SudarSeithy

உலகிலேயே மிகப்பெரிய பவர் பேங்கை உருவாக்கிய நபர்! 5000 ஸ்மார்ட்போனை சார்ஜ் போட முடியுமாம்!

SudarSeithy

உங்கள் Whatsapp ரகசியங்களை அடுத்தவர்கள் பார்வையில் இருந்து மறைக்க! இப்படி செய்தால் போதும்

SudarSeithy