கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் நடைபெற்ற விசாரணையில் அவர் தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணை இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
சித்ரா இறந்த பின்னர் அவரது குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். அதே போல சித்ரா ஆசை ஆசையாக வாங்கிய காரை கூட யாரும் எடுப்பது இல்லையாம். சித்ரா இருந்த போது பல லட்ச ருபாய் மதிப்புள்ள ஆடி கார் ஒன்றை ஆசை ஆசையாக வாங்கி இருந்தார்.
சித்ரா இறந்த போது தங்கி இருந்த ஹோட்டலுக்கு கூட இந்த காரில் தான் சென்று இருந்தார். இந்த காரை சித்ராவிற்கு ஒரு அரசியல் பிரபலம் தான் வாங்கி கொடுத்தார் என்று கூட சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், அந்த காரை சித்ரா தனது சொந்த காசில் தான் வாங்கியதாக அவரது குடும்பத்தினர் கூறி இருந்தனர்.
எனினும் , சித்ரா இறந்த பின்னர் இந்த காரை யாரும் பயன்படுத்துவது இல்லையாம். இருப்பினும் அந்த காரை அடிக்கடி சுத்தம் செய்து வைத்து சித்ராவின் நினைவாக அவரது குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனராம் .