நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், அவரை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த பொலிஸ் பரிசோதகரின் 4ஆம் ஆண்டுநினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்த பொலிஸ் பரிசோதகரின் படத்தில் விளக்கு ஏற்றி, அவரது கல்லறைக்கு முன்னால் மதச் சடங்குகளில் நீதிபதி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
பொலிஸ் பரிசோதகர் இறந்த பிறகு, அவரது இரண்டு பிள்ளைகளையும் தனது பிள்ளைகள் போல் பார்த்துக்கொள்வதுடன், அவர்களின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனே கவனித்து வருகின்றார்.
கடந்த 2017 அன்று ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றது. இதில் நீதிபதியை காப்பாற்றுவதற்கான முயற்சியில் அவரது பொலிஸ் காவலர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.