12.8 C
Manchester
20 May 2022
Image default
வாழ்க்கை முறை

உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவும் அதிசய டீ..! தினமும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாம்

உடல் எடையை சீராக வைத்து கொள்ள பெரும்பாலான டீக்கள் பெரிதும் உதவுகின்றது. அதில் ஒன்று தான் சங்கு பூ டீ. இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் மனம் சோர்வாக உணர்வதை தடுத்து, எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கச்செய்யும்.

நம்முடைய உடம்பு புத்துணர்வுடன் இருந்தாலே, பல நோய்கள் எட்டிப்பார்க்காது. கூடவே சங்கு பூவில் உள்ள தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் உடலை என்றுமே இளமையாக வைத்திருக்க உதவும்.

குறிப்பாக இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்புகள் கரைத்து உடலை சீராக வைத்து கொள்ள உதவுகின்றது.

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. தற்போது இதனை எப்படி செய்யலாம், இதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • சங்கு பூ – சிறிதளவு
  • தேன் – 1டீஸ்பூன்
  • எலும்பிச்சை சாறு – 2 டீஸ்பூன்

செய்முறை

க்ரீன் டீ தயாரிப்பது போன்றே இந்த ப்ளூ டீ யும் தயாரிக்க வேண்டும். மிகவும் சுலபமாக தயாரித்து விடலாம்.

கொதிக்க வைத்த தண்ணீரில் சங்கு பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும்.

அதில் எழுமிச்சை சாறு சில சொட்டுக்கள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ செய்து பருகலாம்.

நன்மைகள்

  •  உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவுகின்றது.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுக்களிலிருந்தும் பாதுகாப்பதாக உதவுகின்றது.
  • கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் காரணமாக எடை அதிகமாக உள்ளவர்களுக்கு இதனை எடுத்து வரலாம். இதில் தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் அதற்கு உண்டு.
  •  குடற்புண் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த பானமாக உள்ளது. மேலும் இந்த வகை டீ அஜீரணத்தை குணமாக்குவதுடன். வயிற்றில் உண்டாகும் எரிச்சலையும் தடுக்கிறது.
  • உடலின் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்ளவும் துணை புரிகிறது.  குறிப்பாக, இது அருந்துவதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது, மன அழுத்தத்தை தவிர்க்க உதவுவதாகும்.

Related posts

சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லையா? இந்த பொடி சாப்பிட்டு வாங்க. சீக்கிரம் பலன் தெரியும்

SudarSeithy

கொஞ்சம் விலை அதிகமென்றாலும் இதை சாப்பிடாமல் இருக்கக்கூடாது!

SudarSeithy

சோளத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் !!

SudarSeithy