15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று அவசியம்: இலங்கையிடம் கனடா வலியுறுத்து

நாட்டில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜுலை’ இனக்கலவரங்களாலும் அதன் பின்னரான போர் நிலைமைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தமது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை கனடா தெரிவித்துள்ளது.

அத்துடன் , கடந்த 2009 ஆம் ஆண்டில் போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டிருப்பினும் கூட அதனால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவாறான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை இலங்கை முன்கொண்டு செல்வது அவசியமாகும் என்றும் கனடா வலியுறுத்தியிருக்கின்றது.

இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘கறுப்பு ஜுலை’ இனக்கலவரத்தின் நீங்காத வடுக்கள் இன்றளவிலும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் நிலையில், அக்கலவரம் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் 38 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.

அதனை நினைவுகூரும் வகையில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் கனேடியத் தமிழர்களுடனும் உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ்ச்சமூகத்துடனும் ஒன்றிணைந்து, இலங்கையில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜுலை’ இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூருகின்றோம் எனவும் கனேடிய பிரதமர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அதிகரித்துள்ள கொரோனா மரணங்கள் – மேலதிகமாக இறக்குமதி செய்யப்படவுள்ள சடலம் பொதி செய்யும் பைகள்

SudarSeithy

நாட்டில் சர்ச்சைக்குரிய சிங்கராஜா வனத்தின் தற்போதைய நிலை – வெளியான படங்கள்

SudarSeithy

இலங்கையின் நிலை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

SudarSeithy