செய்தி

அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

அதிபர்களுக்கு பணிப்புஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது ஜனாதிபதி, ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின், பிரதமர், பிரதமரின் அலுவலக அதிகாரிகளின் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின் உத்தரவு என்று குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பாடசாலை அதிபர்களுக்கு பலர் கடிதங்களை அனுப்பி வைக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளும்கூட இவ்வாறான கடிதங்களை அனுப்பி வைக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.அதிபர்கள் தமது பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும்போது அவ்வாறான எந்தவொரு கடிதத்தையும் அடிப்படையாக எடுக்கக்கூடாது.

உரிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கமைவாக மாத்திரமே மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஒழுங்கு விதிகளை மீறுகின்ற அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார் என்றுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

முன்னணியின் சுமந்திரன் ஆகிறாரா சுகாஷ்?

அம்மு

சுற்றுலா நகரங்கள் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள முக்கிய ஆலோசனை

அம்மு

25,000 கோடி வீண் செலவு; வருகிறது மற்றுமொரு ஆபத்து! மிலிந்தவின் அறிவிப்பு

அம்மு