செய்தி

விடுதலைப்புலிகளை விட சிவாஜிலிங்கம் படுமோசம் – ராஜபக்ச அரசு கடும் சீற்றம்

பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை விடப் படுமோசமானவர் சிவாஜிலிங்கம். அவரை ஒருபோதும் திருத்தவே முடியாது என அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

நீதிமன்றத்த தடையுத்தரவை மீறித் திலீபனை அஞ்சலித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் பயங்கரவாதிகளை நினைவுகூர சட்டத்தில் இடமில்லை. ஆனபடியால் பயங்கரவாதியான திலீபனையும் நினைவுகூர முடியாது. நீதிமன்றமும் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடையுத்தரவு வழங்கியுள்ளது. இவற்றை மீறிச் செயற்பட்டதால் பொலிஸாரால் சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார்.

அவர் வடக்கில் கடந்த காலங்களிலும் நீதிமன்றங்களின் தடையுத்தரவுகளை மீறி அடாவடிகளைப் புரிந்துள்ளார்.

சிவாஜிலிங்கம், தான் புலிகளின் உறுப்பினர் என்ற நினைப்புடன் செயற்பட்டு வருகின்றார். அவர் பயங்கரவாதிகளைவிட மோசமானவர். அவரை ஒருபோதும் திருத்தவே முடியாது.

வடக்கில் சிவாஜிலிங்கம் மட்டுமல்ல விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் எனப் பல மோசமான அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு நீதித்துறைதான் தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மகிந்தவுக்கு நன்றிக் கடனை செலுத்தி முடிக்க முடியாது! மெதகொட அபதிஸ்ஸ தேரர்

அம்மு

பொது தேர்தல் தொடர்பில் வெளியான செய்தி..

அம்மு

அச்சுறுத்தும் இலங்கை அரசு! யஸ்மின் சூக்காவிற்கு ஆதரவாக கைகோர்க்கும் மனித உரிமைகள் அமைப்பு

அம்மு