உலகம்

முதல் கையெழுத்து எதற்கு? கமலா ஹாரிசின் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் வென்றதும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே முதல் கையெழுத்து இடுவோம் என ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3ல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில், ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில், ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து அவர், துணை ஜனாதிபதி வேட்பாளராக என்னை நிறுத்துவதாக ஜோ பிடன் கூறியபோது எனக்கு என்னுடைய தாய் தான் நினைவுக்கு வந்தார்.

நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதை மேலேயிருந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

தேர்தலில் வெற்றிபெற்று, நாங்கள் பதவியேற்ற முதல் 100 நாட்களில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.

எங்களுடைய முதல் கையெழுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே இருக்கும். அதிக அளவில் பரிசோதனைகள் செய்வது, தடுப்பூசி கண்டுபிடிப்பதை வேகப்படுத்துவது ஆகியவை மேற்கொள்ளப்படும்.

பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இணைவது மிக முக்கியமான திட்டமாகும். நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளுடனான உறவை புதுப்பித்தல் மற்றொரு முக்கியமான பணியாகும்.

போதிய ஆவணங்கள் இல்லாமல் அகதிகளாக தவிக்கும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக எங்களுடைய நிர்வாகம் கருணையுடன் பரிசீலிக்கும்.

இனவெறி தாக்குதலை தடுப்பதற்கான மசோதா நிச்சயம் கொண்டு வரப்படும் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பிரித்தானியாவில் பயங்கரம்… ஈவு இரக்கமின்றி மனைவியை கொல்ல முயன்ற கணவன்: அதிரவைக்கும் சம்பவம்

அம்மு

கனடா நகரமொன்றில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு: இவர்கள்தான் காரணம்!

அம்மு

பெட்ரோல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வேனை சோதனையிட்ட பொலிசார்: ரகசிய அறைக்குள் கண்ட அதிரவைத்த காட்சி

அம்மு