பிக்பாஸ் 5 சீசனை அடுத்து ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகியது. நிகழ்ச்சியின் வின்னராக பாலாஜி முருகதாஸ் தேர்வானார்.
இந்நிகழ்ச்சியில் பல சர்ச்சையான சம்பவங்கள் நடந்தது. அதில் முக்கியமாக காதல் விவகாரமும் ஸ்மோக்கில் அறையில் நடந்த பல காட்சிகள் தான் பெரியளவில் பேசப்பட்டது.
ஓடிடி தளம் என்பதாலும் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகும் என்பதாலும் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்தில் ஸ்மோக்கிங் ரூமில் நடந்த சம்பவமும் காண்பிக்கப்பட்டது.
அப்போது பாலாஜிக்கும் அபிராமிக்கும் என்ன நடந்தது அங்கு என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதனை நேரில் பார்த்த நிரூப் இந்த விஷயத்தை பெரிதாக்கி பேசினார்.
தற்போது ஸ்மோக்கிங் அறையில் பாலாவுடன் என்ன நடந்தது பற்றி அபிராமி லைவ் சாட்டில் பகிர்ந்துள்ளார். ஒன்னுமே நடக்கவில்லை. தேவையில்லாத ஒன்று இது. நான் முட்டாள் கிடையாது.
24 மணிநேர நிகழ்ச்சி என்பதால் எனக்கு இங்கீதம் இருக்கிறது. யாரை எனக்கு பிடிக்கும் என்பதை ஓப்பனாக சொல்லிய நான் இதையும் போல்ட்டாக சொல்லமாட்டேனா என தெரிவித்துள்ளார்.