ஆன்மீகம்

உங்க ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் மோசமான மிருக குணம் என்ன தெரியுமா? உடனே படிங்க

மனிதாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குள் ஓர் மிருக குணம் இருக்கும். அதற்கு அவர்கள் பிறந்த ராசியும் ஒரு காணரமாக இருக்கும் என ஜோதிடம் சொல்கின்றது.

அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்காரரும் தங்களுக்குள் இருக்கும் மிருக குணத்தை எப்படி வெளிப்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

இவர்கள் கொடூரமான முடிவுகள் ஏற்பட காரணமாக இருப்பார்கள். உங்களை விட்டு பிரிந்து செல்வார்கள், உங்களை தற்காத்துக் கொள்ள ஒரு கணம் கூட அனுமதிக்க மாட்டார்கள், உங்களை அமைதியிலும், இருளிலும் தத்தளிக்கவிடுவார்கள்.

உங்களின் சமாதானத்தை கேட்க அவர்களுக்கு ஆர்வமும், பொறுமையும் ஒருபோதும் இருக்காது. உங்கள் பக்க நியாயத்தை கேட்க ஒருபோதும் முயற்சி செய்யமாட்டார்கள்.

ரிஷபம்

இவர்கள் ஏமாற்றுக்காரர்கள். இவர்களால் உண்மையாக இருக்க முடியாது, அவர்களின் பாலியல் உணர்ச்சி அழைக்கும்போது அவர்கள் செல்வார்கள்.

தங்களின் செயலை எப்போதும் நியாயப்படுத்த இவர்கள் நினைப்பார்கள், அவர்கள் என்ன செய்தாலும் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து செய்ய வேண்டுமென்று விரும்புவார்கள். ஏமாற்றுவதில் இவர்கள் கில்லாடிகள்.

மிதுனம்

கொளுத்திப் போடுவதில் இவர்கள் வல்லவர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அளவிற்கு இவர்கள் உண்மைகளை மறுப்பார்கள்.

ஆனால் இவர்களின் உண்மையான குணம் உங்களிடம் இருந்து அவர்களுக்கு தேவையானது கிடைத்த பிறகுதான் வெளிப்படும். உங்களை பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டு தப்பிக்க இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.

கடகம்

மறப்பதும், மன்னிப்பதும் இவர்கள் அகராதியிலேயே இல்லாத ஒன்றாகும். சாதாரண விஷயங்களுக்கு கூட இவர்கள் உங்களை மிகவும் கெஞ்ச வைப்பார்கள்.

உங்களை வெளியேற்ற அவர்கள் முடிவெடுத்துவிட்டால் அது இறுதியான மற்றும் உறுதியான முடிவாகும். நீங்கள் செய்த தவறு என்னவென்றே தெரியாமல் நீங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவீர்கள்.

சிம்மம்

மனக்கிளர்ச்சிக்கு மற்றொரு உருவம் இவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் திடீரென உங்களுக்கு ஒரு அவமானத்தை ஏற்படுத்துவார்கள், அது மிகவும் கடுமையானதாக இருக்கும்.

அதனை நினைத்து நீங்கள் ஆயுள்முழுவதும் பயப்படுவீர்கள். மிருககுணம் அதிகம் வாய்ந்த ராசிக்காரர்களில் இவர்களும் ஒருவர், உங்களை வாழ்க்கையை விட்டு வெளியேற்றுவது நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

கன்னி

இவர்கள் இயற்கையாகவே பிறரை கோபப்படுத்துபவர்களாக இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் உங்களை வெறுக்க தொடங்கிவிட்டால் நீங்கள் எதிர்பார்க்காத நேரம் உங்களை கொடூரமாக மனரீதியாக தாக்குவார்கள்.

அவர்கள் இவ்வளவு பயங்கரமானவரா என்று பாதிக்கப்பட்ட பிறகுதான் உங்களுக்குத் தெரியும். இவர்கள் தாங்கள் வெறுப்பவர்களுக்கு ஒருபோதும் இரக்கம் காட்டமாட்டார்கள்.

துலாம்

பொய் சொல்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். ஒருநாளைக் கூட இவர்களால் பொய் கூறாமல் கடக்க முடியாது, பெரும்பாலும் இவர்கள் மோதலை தடுப்பதற்காகவே பொய்களைக் கூறுகிறார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர்களை என்ன மதிப்பிட்டீர்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு தேவையில்லாதது. தங்களின் பொய்கள் மூலம் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.

விருச்சிகம்

அடக்குமுறைக்கு சொந்தக்காரர். அனைவரையும் எப்போதும் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பும் இவர்கள் தான் செய்வதுதான் எப்பொழுதும் சரி என்ற எண்ணம் உறுதியாகக் கொண்டவர்கள்.

எனவே அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் உங்கள் வாழ்க்கை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் செல்லும்வரை நகரமாட்டார்கள்.

தனுசு

மிகவும் கூலானவர். இவர்கள் அளவிற்கு உணர்ச்சிகள் அற்றவரோ அல்லது கூலானவர்களோ யாரும் இருக்க முடியாது.

அவர்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டால் அவர்கள் அதற்காக ஒருபோதும் வருத்தமாட்டார்கள், சொல்லப்போனால் நீங்கள் அவர்கள் வாழ்க்கையில் இருந்தது போலவே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

இவர்கள் எதிலும் பொறுமையாக இருக்கமாட்டார்கள், எனவே உங்களால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றால் நீங்கள் உடனடியாக வெளியேற்றப்படுவீர்கள்.

மகரம்

வார்த்தைகளால் காயப்படுத்துவதில் வல்லவர்கள். மகர ராசிக்காரர்களிடம் பிரச்சனை வைத்துக்கொண்டு அவமானப்படமால் விலகுவது என்பது நடக்காத காரியம்.

மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதே இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களின் மிருக குணம் உடனிருந்தே கவிழ்ப்பது. இயற்கையாகவே இவர்கள் சிறந்த பொய்யர்கள்.

உங்களிடம் பொய் கூறுவது, உங்கள் செல்வத்தை கவருவது, உங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடுவது என அனைத்து விதமான செயல்களையும் இவர்கள் தயங்காமல் செய்வார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களின் மிருக குணம் ஆதிக்கம் செலுத்தவது ஆகும். இவர்கள் தங்கள் உணர்ச்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு இருப்பதால் இவர்களால் மற்றவர்களின் உணர்ச்சிகளை பற்றி சிந்திக்க நேரமே இருக்காது.

இவர்களுடன் நீங்கள் நெருக்கமாக இருந்தாலும் நீங்கள் எப்பொழுதும் இவர்களுக்கு இரண்டாவதுதான். தன்னை நேசிக்கும் அளவுக்கு இவர்கள் யாரையும் நேசிக்கமாட்டார்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Astrology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Astrology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

உங்கள் பெயரின் முதல் எழுத்து A என்ற எழுத்தில் தொடங்குதா? நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா?

அம்மு

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது என கூறப்படுவது ஏன்…?

அம்மு

நவகிரக தோஷம் போக்கும் சில பொதுவான வழிமுறைகள்!!

அம்மு