வாழ்க்கைமுறை

முதல் கணவருடன் பிரிவு! மறுமணத்துக்கு பின்னர் 46 வயதில் கர்ப்பமாகி குழந்தை பெற்ற நடிகை ஊர்வசி.. அவரின் வாழ்க்கை பாதை

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி.

கவிதா ரஞ்சனி என்பதே இவரின் இயற்பெயர் என்ற நிலையில் சினிமாவுக்காக ஊர்வசி என மாற்றி கொண்டார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். சொந்த வாழ்க்கையில் பல்வேறு மேடு பள்ளங்களை கடந்து வந்தவர் ஊர்வசி.

தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது 2000-ம் ஆண்டு, மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை அவர் திருமணம் செய்தார்.

இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. எட்டு ஆண்டுகள்தான் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக 2008-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

மகள் குஞ்சட்டாவை தன்னுடன் வைத்துக்கொள்ள அனுமதிக்குமாறு, எர்ணாகுளம் நீதிமன்றத்தை ஊர்வசி நாடினார். விசாரணையில், ஊர்வசி எப்போதும் மது போதையில் இருப்பவர். அவரை நம்பி மகளை எப்படி ஒப்படைப்பது? என கணவர் மனோஜ் கே.ஜெயன் குற்றம் சாட்டினார். முடிவில், தந்தையுடனேயே சென்றார் மகள் குஞ்சட்டா.

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை ஊர்வசி 2வது திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணம் அமைந்த விதம் சுவாரசியமானது.

அது குறித்து முன்னர் ஊர்வசி கூறுகையில், என்னுடைய கணவர் சிவபிரசாத் வேறு யாருமில்லை எங்களுடைய குடும்ப நண்பர். எங்கள் வீட்டில் நல்லது நடந்தாலும்,கெட்டது நடந்தாலும் அவர் தான் முதல் ஆளாக வந்து நிற்பார். தான் எனது தாத்தா மற்றும் என் தம்பி கமலுக்கு மிகவும் பிடிக்கும்.

எங்கள் வீட்டில் சில நாட்களாகவே பிரச்சினை நிலவி கொண்டிருந்ததால் மன அமைதிக்காக நாங்கள் திருவண்ணாமலைக்கு சென்று இருந்தோம்.

அப்போது ரமணாஸ்ரமத்தில் தங்கி சிறப்பு பூஜைகளும் செய்தோம். அப்போது பூசாரி என்னுடைய கணவர் என்று நினைத்து மாலையைக் கொண்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த சிவபிரசாத் மீது அணிவித்தார்.

பின்னர் சிவபிரசாத் அந்த மாலையைக் கழற்ற முயன்ற போது என்னுடைய தாத்தா கழட்ட வேணாம் அப்படியே இருக்கட்டும் என கூறினார். நாங்கள் இருவரும் பூஜை முடியும் வரை கழுத்தில் இருந்த மாலையை கழற்றவே இல்லை. அப்போது என் மனதுக்குள் பல எண்ணங்கள் தோன்றியது.

அதுவரை நாங்கள் இருவரும் எங்களுடைய திருமணத்தை பற்றி நினைக்கவே இல்லை, அது கடவுளே எங்களுக்கு ஆசீர்வதம் கொடுத்தது போல் இருந்தது. பின்னர் தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம் என கூறினார்.

பின்னர் தனது 46வது வயதில் மீண்டும் கர்ப்பமான ஊர்வசிக்கு கடந்த 2014ல் மகன் பிறந்தான்.

மகன் பிறந்த போது அவர் கூறுகையில், மகன் பிறந்த பிறகு என் வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போனது. அவனோட அழகான முகம், என்னை அப்படியே மாற்றிவிட்டது. எப்போதுமில்லாத அளவுக்கு இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன்.

அதிக குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்பது என் அதனால்தான் இந்த வயதிலேயேயும் ஒரு மகனுக்குத் தாயாகியுள்ளேன் என கூறியிருந்தார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சத்தமாக கதைத்தாலும் கொரோனா பரவும்! ஆய்வில் வெளியாகிய தகவல்

அம்மு

அதிக பெண்களுக்கு ஏன் நெஞ்சுவலி வருதுன்னு தெரியுமா?

அம்மு

கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயத்தை யார் யார் எவ்வளவு குடிக்கலாம்?

அம்மு