15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திடீர் சுகவீனம் காரணமாக சிறுமியை வைத்தியசாலையில் பெற்றோர்அனுமதித்த போது, அவர் கருவுற்றிருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பொலிஸில் அளித்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.