விளையாட்டு

ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்

ஐபிஎல் தொடரில் இதுவரை 19 வீரர்கள் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதித்துள்ளனர்.

சிறிய மைதானங்கள், பவர்ப்ளே விதி என பல சாதக அம்சங்கள் இருப்பதால் டி20 போட்டிகளில் ஓட்டங்கள் குவிப்பது துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமல்ல.

ஆனால், அதிரடிக்கு மத்தியில் அடுக்கடுக்காக விக்கெட்டுகளை வீழ்த்துவதில் பந்து வீச்சாளர்கள் தவறவில்லை.

ஐபிஎல் தொடர்களில் இதுவரை 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மட்டுமே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தப்படவில்லை.

எஞ்சிய அனைத்து சீசன்களிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர்கள் அசத்தியுள்ளனர்.

அதிலும், சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை தனதாக்கியுள்ளார்.

பிரதான பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி பகுதி நேர பந்துவீச்சாளர்களும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி வியக்க வைத்துள்ளனர்.

கடந்த 2009-ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்து யுவராஜ் சிங் மிரள வைத்தார்.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ரோகித் சர்மா, ஐதராபாத் அணிக்காக விளையாடியபோது, ஹாட்ரிக் எடுத்தார்.

அவர் தற்போது அணித் தலைவராக உள்ள மும்பை அணிக்கு எதிராக கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாட்ரிக் எடுத்து அமர்களப்படுத்தினார்.

இளம் வீரர்களுக்கே ஹாட்ரிக் விக்கெட் எட்டாக் கனியாகவுள்ள நிலையில், தனது 41 ஆவது வயதில் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து பிரமிக்க வைத்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக களம் கண்ட தாம்பே, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி உலகின் பார்வையை தன் பக்கம் ஈர்த்தார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Sport News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Sport News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

டோனி எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை… இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்டது குறித்து பேசிய இர்பான் பதான்

அம்மு

ஐ.பி.எல்லிற்காக டுபாய்க்கு புறப்பட்டார் மஹேல!

அம்மு

விராட் கோஹ்லி, நடிகை தமன்னாவை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

அம்மு