விளையாட்டு

ஐ.பி.எல். போட்டிகளில் கொட்டும் பண மழை: வெளியான முழு தகவல்

உலகின் செல்வாக்கு மிக்க விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாக வளர்ச்சியடைந்திருக்கிறது ஐபிஎல்.

ஓராண்டில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிடைக்கும் பணம் 4 ஆயிரம் கோடி ரூபாய்.

விளம்பரங்கள் , தொலைக்காட்சி உரிமங்கள், ஒன்லைன் சூதாட்டங்கள், டிக்கெட், போக்குவரத்து, சுற்றுலா, ஆடைகள், தின்பண்டங்கள் என ஒட்டு மொத்தமாக 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் புழங்குவதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

விராட் கோஹ்லி, டோனி, ரோஹித் ஷர்மா ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் சம்பளமாக மட்டும் இதுவரை நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பாதித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஐபிஎல் போட்டிகளில் மிகவும் பிரபலம்.

இந்த நாடுகளில் தொலைக்காட்சி மற்றும் ஒன்லைன் உரிமங்களைப் பெற்றிருக்கும் நிறுவனங்கள் பெருமளவு லாபம் ஈட்டுகின்றன.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் ஒரேநேரத்தில் ஒன்லைனில் கண்டு களிப்பதாக கூறப்படுகிறது.

தொலைக்காட்சிகளின் ரேட்டிங் பலமடங்கு அதிகரிக்கிறது. இவையெல்லாம்தான் பல வீரர்களுக்கு கொரோனா வந்த பிறகும் ஐபிஎல் போட்டிகளை நடத்தியே ஆக வேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Sport News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Sport News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஐபிஎல் 2020-க்கு அனுமதி அளித்த அரசு! போட்டி நடைபெறும் திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

அம்மு

இது நடந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்! கிண்டலுக்கு ஆளாகியுள்ள பிரபல இளம் வீரர் ரஷித் கான்

அம்மு

சமூக வலைதளத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் மீது இனவெறி சாடல் – இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார்

அம்மு