உலகம்

இது பேரழிவில் முடியக்கூடும்: பிரித்தானியா விமானப்படை தலைவர் எச்சரிக்கை

விண்வெளியில் நடக்கும் ஆயுத போட்டி பேரழிவில் முடியக்கூடும் என்று பிரித்தானியா விமானப்படைத் தலைவர் மார்ஷல் மைக் விக்ஸ்டன் எச்சரித்துள்ளார்.

விண்வெளி இப்போது போட்டியிடும் போர்-சண்டைக் களமாக மாறியுள்ளது என்று மார்ஷல் மைக் விக்ஸ்டன் கூறியுள்ளார்.

சாத்தியமான வான், பாலிஸ்டிக் மற்றும் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை பிரித்தானியா இனி புறக்கணிக்க முடியாது என எச்சரித்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக நமது வான் அல்லது விண்வெளியை யாரும் அணுகாத நிலையில் இனியும் யாரும் அணுகமாட்டார்கள் என நாம் எடுத்துக்கொள்ள முடியாது,

வான், பாலிஸ்டிக் மற்றும் ஏவுகணை தாக்குதலை நாம் புறக்கணிக்க முடியாது என்று விக்ஸ்டன் கூறினார்.

பிரித்தானியாவின் விண்வெளி அணுகல் அதன் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும், பிரிட்டிஷ் செயற்கைக்கோள் சேவைகளுக்கு ஏதேனும் இழப்பு அல்லது இடையூறு ஏற்பட்டால் அது அன்றாட வாழ்க்கையில் பேரழிவு விளைவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

லண்டனில் வீட்டில் மகனுடன் மர்மமாக இறந்து கிடந்த பெண் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்? வெளியான முழு தகவல்

அம்மு

25,000 டொலர் பரிசை வென்ற 14 வயது இந்திய வம்சாவளி சிறுமி! எப்படி தெரியுமா?

அம்மு

‘முக கவசம் அணிந்தால் ஆபத்து’.. மருத்துவர்கள் குழு எச்சரிக்கை

அம்மு