தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1990ல் வெளியாகி மிகபெரிய வரவேற்பு பெற்ற படம் அஞ்சலி. ரகுவரன், ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரமாக பேபி ஷாமிலி, ரிச்சர்ட் ரிச்சி நடித்திருந்தனர்.
ரிச்சர்ட் இப்படத்திற்கு பிறகு 1999ல் ஸ்வப்னலோகன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழில் காதல் வைரஸ் படத்திலும் அறிமுகமாகினார். அதன்பின் அவர் நடித்த படங்கள் பெரியளவில் பேசப்படவில்லை.
சமீபத்தில் திரெளபதி, ருத்ரதாண்டம் போன்ற படங்கள் ரிச்சர்ட்டிற்கு நல்ல ஒரு அங்கிகாரத்தை கொடுத்தது. பல தோல்வி படங்களை கொடுத்து வந்த ரிச்சர்ட் தற்போது 44 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்து வருகிறார்.
இதற்கு காரணம் பிரபல இசையமைப்பாளர் மகள் ஒருவரை காதலித்து வந்ததாகவும் நிச்சயம் வரை சென்று திருமணம் நின்றுள்ளது. காதலிக்கும் ரிச்சர்ட்டுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர் என்று கூறப்பட்டது.
இதன்பின் ரிச்சர்ட் தனியாக வாழ்ந்து வருகிறார். யார் அந்த இசையமைப்பாளர் மகள் என்று பலர் யூகித்து வருகிறார்கள்.