இந்தியா

13 வயது சிறுமிக்கு தெரியாமலே திருமணத்தை நடத்த திட்டமிட்ட பெற்றோர்! ஆனால் நடந்த எதிர்பார்த சம்பவம்

இந்தியாவில் 13 வயது சிறுமி தனக்கே தெரியாமல் பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்ததால், அதை அவர் தைரியமாக தடுத்து நிறுத்திய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கொரோனா காலத்தில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.

ஆனால், இதில் சட்ட விதிமுறைகளை மீறி நடக்கும் திருமணங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

அந்த வகையில், உத்திரப்பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியான ப்ரீத்திக்கு அவளுக்கே தெரியாமல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

3 குழந்தைகளைக் கொண்ட அந்தக் குடும்பத்தில் தந்தை ஒருவர் மட்டுமே வருமானத்தைக் கொண்டவராக இருப்பதால், இது நல்ல சமயம் என பெற்றோர்கள், ஊரார்கள் எல்லாம் ஒன்றுகூடி திருமணம் நிச்சயித்துள்ளனர்,

இந்நிலையில் திருமண திகதியை குறிப்பதற்காக மணமகன் வீட்டில் இருந்து சிலர் வந்தபோது இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பிரீத்தி துளியும் யோசிக்காமல் அண்ணனுடைய தொலைபேசியில் இருந்து அவளது ஆசிரியரை அழைத்து விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

இதனால் பிரீத்தியின் வகுப்பு ஆசிரியரான மது சர்மா உடனே அவளது பெற்றோர்களை நேரில் சந்தித்து இது தவறு எனக் கண்டித்துள்ளார்.

இதேபோல பிரீத்தியின் பக்கத்து வீட்டில் இருந்த 15 வயது சிறுமி ரிங்கிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று இருக்கிறது.

பிரீத்தி விஷயத்தை கேள்விப்பட்ட ரிங்கி அவளும் தன்னுடைய ஆசிரியருக்கு விஷயத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். இதனால் ஆசிரியர் காவல் துறை மற்றும் குழந்தைகள் நல அமைப்பினரின் உதவியோடு சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சசிகலா! திரைப்பட கேசட்கள் மூலம் ஜெயலலிதாவுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு.. வாழ்க்கை கதை

அம்மு

தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை ராணுவம்! இது தான் காரணமா?

அம்மு

40 வயது பயிற்சியாளருடன் 2-வது முறையாக ஓட்டம் பிடித்த 20 வயது இளம் பெண்! வலை வீசி தேடி வரும் பொலிசார்

அம்மு