14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

தனியார்துறையின் ஆதிக்கத்தை ஒடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிக்கையில்,

இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ள அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தற்போது அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தனியார் பிரிவின் தன்னிச்சையான செயற்பாடு என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

இதன்படி தற்போது கலைக்க உத்தோசிக்கப்பட்டுள்ள அரச வணிக கூட்டுறவு மொத்த வர்த்தக நிறுவனத்தை மீண்டும் வலுப்படுத்தி அதன் ஊடாக குறித்த பொருட்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனி, கோழி இறைச்சி, தேங்காய் எண்ணெய், பருப்பு, வெங்காயம், கிழங்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை அந்த நிறுவனம் ஊடாக நேரடியாக இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

வெள்ளவத்தையில் கட்டிடம் உடைந்து விழுந்ததில் நபர் ஒருவர் பரிதாப பலி

SudarSeithy

மது பிரியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

SudarSeithy

கொரோனா பாதித்த தன் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையினுள் போட்டு கட்டி தழுவிய தந்தை!

SudarSeithy