பயணக்கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வடபகுதிக்கான ரயில் சேவை நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பமாக உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை அதிகாலை 5.15 முதல் காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த ரயில் சேவைகள் மீண்டும் இடம்பெறவுள்ளன.
காலை 5.15க்கு காங்கேசன்துறையிலிருந்து வவுனியா நோக்கியும் பிற்பகல் 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கியும் ரயில்சேவை இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.