செய்தி

சிறுவனை அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த இருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாய்ந்தமருது மீன்வாடி ஒன்றில் இச்சம்பவம் நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.

மைதானம் ஒன்றில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை மீன் தருவதாக அழைத்துச் சென்ற 27 வயதுடைய சந்தேக நபர் மற்றும் சம்பவத்தை பார்த்து பின் தொடர்ந்து சென்ற மற்றுமொரு 21 வயது மிக்க சந்தேக நபர்கள் இருவருமே கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய மாணவன் தற்போது கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபர்கள் இருவரையும் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வைத்தியர் போல தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பெண்கள் விடுதிக்கு வந்த நபர் கைது

அம்மு

வாழைச்சேனையில் புதையல் தோண்டிய 11 பேருக்கு விளக்கமறியல்

அம்மு

பாரிய அளவில் அதிகரிக்கும் தேங்காயின் விலை

அம்மு