12.8 C
Manchester
20 May 2022
Image default
இலங்கை

இலங்கை மக்களுக்கு புதிய பிரதமர் ரணில் விடுத்துள்ள முக்கிய தகவல்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையானது நாட்டில் துன்பத்தையும் அமைதியின்மையையும் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய நெருக்கடி நிலைமை “மோசமடைவதற்கு முன் சரியாகிவிடும்” என கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் நிதி உதவிக்காக உலகின் பல நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்த அவர், நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அடுத்த விலை உயர்வு; சுமார் 500 தொழிற்சாலைகளுக்கு மூடு விழா?

SudarSeithy

ஜேர்மன் தூதுவர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு விஜயம்

SudarSeithy

நாடு முழுவதும் நாளை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

SudarSeithy