12.8 C
Manchester
20 May 2022
Image default
உலகம்

புடினுக்கு என்ன நோய் -இரகசியத்தை உடைத்த கோடீஸ்வரர்

ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் என்ன நோயால் அவதிப்படுகிறார் என்ற இரகசியத்தை தற்போது வெளிநாடொன்றில் தங்கியுள்ள அவருக்கு நெருக்கமான கோடீஸ்வரர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி புடின் இரத்தப் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்புடைய கோடீஸ்வரரின் பெயர் வெளியிடப்படவில்லை எனவும், மார்ச் மத்தியில் தொடர்புடைய சம்பவம் குறித்து விவாதிக்கப்படும் சூழலில் அந்த கோடீஸ்வரர் தமது கருத்தை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதில், ரஷ்யாவின் பொருளாதாரம் மட்டுமன்றி, உக்ரைன் உட்பட உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் விளாடிமிர் புடின் சீரழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சித்தம் பேதலித்த ஒருவரால் உலகை தலைகீழாக மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு மொத்த காரணம் புடின் தான் என்றார். மேலும், விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான 20 அல்லது 30 நபர்களில் அவரும் ஒருவர்.

மொத்தம் 11 நிமிடங்கள் பதிவாகியுள்ள அவரது ஓடியோவில், மேற்கத்திய நாடுகளின் தடைகளிலிருந்து ஐரோப்பாவில் தனது முதலீடுகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என அந்த கோடீஸ்வரர் வினவியபடியே இருந்துள்ளார்.

விளாடிமிர் புடினை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ள அவர், விளாடிமிர் புடின் புற்றுநோயால் இறப்பது உறுதி அல்லது அரசியல் நெருக்கடி காரணமாக அவர் வெளியேற்றப்படுவார் என தாங்கள் அனைவரும் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உக்ரைன் மேயரை கடத்தி சென்ற ரஷ்ய ராணுவம்: பரபரப்பு காட்சிகள்!

SudarSeithy

போருக்குத் தப்பி உக்ரைனிலிருந்து அகதிகளாக வருவோருக்கு வேலைவாய்ப்பு: கனேடிய மாகாணம் ஒன்று அறிவிப்பு

SudarSeithy

தடுப்பூசி போடாவிட்டால் பணி நீக்கம்; ஊழியர்களை எச்சரித்த கூகுள் !

SudarSeithy