12.8 C
Manchester
20 May 2022
Image default
உலகம்

வடகொரியாவில் புதிய அச்சம்!! வைரலாகும் காட்சிகள்

உலகளாவிய கொரோனா அச்சுறுத்தலை தடுத்திருந்த வடகொரியாவில் தற்போது தான் தொற்று தீவிரமடையும் நிலையில், அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் முதன்முறையாக முக கவசம் அணிந்த படி நடமாடுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொற்று அச்சுறுத்தலுடன் வடகொரியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ள நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன.

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று, அச்சுறுத்தலை ஏற்படுத்திய தருணத்தில் வடகொரியா சிறப்பாக அதனை தடுத்திருந்தது.

அனைத்து நாடுகளின் சர்வதேச தொடர்புகளை துண்டித்து தொற்றுப் பரவுவதை தடுத்திருந்தது.

வடகொரியாவில் புதிய அச்சம்!! வைரலாகும் காட்சிகள்

எனினும் தற்போது உலகளாவிய கொரோனா தொற்று சற்று தணிவு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், வடகொரியாவில் தொற்று புதிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. அங்கு பல்லாயிரம் பேர் காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் ஒருவருக்கு கொரோனா தொற்றின் ஒமைக்ரோன் திரிபு இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதுடன், வடகொரியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், முதன் முறையாக முக கவசம் அணிந்து கூட்டத்தில் பங்கேற்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை வடகொரியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1 இலட்சத்து 87 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

16 வயது மகனுடன் சேர்ந்து மூன்று பிள்ளைகள் கொலை.. கொடூர தாய் கூறிய அதிர்ச்சி காரணம்!

SudarSeithy

திருமணம் முடிந்த சில நாட்களிலே பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட சோகம்.. ஆப்கனில் நடந்த துயர சம்பவம்!

SudarSeithy

பருவநிலையை கணிக்கும் விலங்கு ஒன்றைக் காண்பதற்காக காத்திருக்கும் கனேடியர்கள்: சுவாரஸ்ய பின்னணி

SudarSeithy