அங்கஜனின் கிளிநொச்சி பெற்றோல் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலையால் அங்கிருந்து முகாமையாளர் தப்பி ஓடியுள்ளார்.
அங்கஜனின் கிளிநொச்சி பெற்றோல் நிலையத்தில் கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கும், அங்கஜனின் ஆதரவாளர்களுக்கும் இடைமுறித்து எரிபொருள் வினியோகம் செய்வதால் வரிசையில் காத்திருக்கும் அப்பாவிப் பொதுமக்களிற்கும், உத்தியோகத்தர்களிற்கும் எரிபொருள் கிடைக்காமையினால் அங்கு குழப்ப நிலை நிலவி உள்ளது.
இதேவேளை குறித்த பெற்றோல் நிலையத்தின் முகமையாளர் தப்பியோடியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் எதுவும் செய்யமுடியாது என கைவித்ததால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.