14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

கிளிநொச்சியிலிருந்து குளிரூட்டி வாகனத்தில் கடத்தப்பட்ட மாடுகள்!

கிளிநொச்சியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகள் ஏற்றிச் சென்ற ஒருவர் பளை நகரப் பகுதியில் இன்று மாலை பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து யாழிற்கு அனுமதிபத்திரமின்றி இறைச்சிக்காக 9 கால்நடைகளை குளிரூட்டி வாகனத்தில் ஏற்றிச் செல்வதாக பளை பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

அந்த இரகசிய தகவலையடுத்து பளை நகரப் பகுதியில் வைத்து குறித்த வாகனத்தை பளை பொலிஸார் சோதனையிட்டபோது மாடுகள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.

மேலும் கைதான யாழ் மாவட்டத்தை சேர்ந்த சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஊரடங்கு தொடரும்? வெளிவந்த உள்ளக தகவல்

SudarSeithy

லண்டனில் இருந்து இலங்கையில் ஏமாற்றப்படும் இளம் பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

SudarSeithy

மீண்டும் அதிகரிக்கும் சீமெந்து விலை

SudarSeithy