16.1 C
Manchester
27 June 2022
Image default
இந்தியா

மிரட்டும் கொரோனா; இந்தியாவிலும் மூன்றாவது பூஸ்டர் டோஸ்

இந்தியாவில் தொடர்ந்தும் கொரோனா உருமாற்றம் கண்டு வருவதால், மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அளிக்க வேண்டிய தேவை உருவாகலாம் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை தற்பொழுது மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையை சாதகமாக பயன்படுத்தி தடுப்பூசி பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளை, உருமாறிய கொரோனா காரணமாக, பிரித்தானியா போன்ற நாடுகள் பொதுமக்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் அளிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் தொடர்பில் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவிக்கையில், பொதுமக்கள் மத்தியில் நோயெதிர்ப்பு சக்தி குறையும்போது, பூஸ்டர் டோஸ் தேவைப்படும். அதாவது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையும் போது அதை, பூஸ்டர் டோஸ் மூலம் ஈடு செய்து கொள்ளலாம்.

புதிய உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்தும் அடுத்த தலைமுறை தடுப்பூசிகளை கொண்டு இந்த பூஸ்டர் டோஸ் பணிகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் , நாட்டிலுள்ள அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கப்படும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி, 12-18 வயதுடைய சிறார்கள் மத்தியில் ஸைடஸ் காடிலா தடுப்பூசி சோதனை ஏற்கனவே முடிந்துவிட்டது.

ஸைடஸ் காடிலா நிறுவனம் ஏற்கனவே அவரசக்கால அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் சிறார்களுக்கான தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிவிடும் எனவும் கூறிய அவர், எனவே, பள்ளிகளை படிப்படியாக நாம் திறக்க தொடங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழகத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பிஞ்சு குழந்தையை பார்க்கச் சென்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

SudarSeithy

காதலியை 10 ஆண்டுகளாக வீட்டு அறையில் ரகசியமாக வைத்திருந்த இளைஞர்! அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் பின்னணி..

SudarSeithy

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிடலாம் என கனவு கண்ட நபர் உயிரிழப்பு! நடந்தது என்ன? எச்சரிக்கை செய்தி

SudarSeithy