15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

யாழ்.பருத்தித்துறையில் அதிகரிக்கும் கொரோனா; மேலும் 11 பேருக்கு தொற்று

யாழ்.பருத்தித்துறை நகரில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிபு தகவல்கள் தொிவிக்கின்றன.

பருத்தித்துறை நகரில் வர்த்தக, வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவோர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் உட்பட சுமார் 395 பேருக்கு இன்று காலை முதல் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த – 07 பேர், மருதங்கேணியைச் சேர்ந்த – 02 பேர், கரவெட்டியைச் சேர்ந்த – 02 பேருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பருத்தித்துறை நகர் கொத்தணியில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 81 இல் இருந்து 92 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் தீயில் எரிந்து பலியான குடும்பப்பெண்… கைது செய்யப்பட்ட கணவர்

SudarSeithy

வெளியில் தலைகாட்ட முடியாது முடங்கிய பசில் ராஜபக்ஷ? இப்படி ஒரு பரிதாப நிலை!

SudarSeithy

நினைவுகூரும் உரிமை தமிழர்களிற்கு உள்ளது; பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்

SudarSeithy