இந்தியா

கணவனை காய் வெட்டும் கத்தியால் குத்தி கொன்ற மனைவி! விசாரணையில் தெரிய வந்த உண்மை காரணம்

தமிழகத்தில் அடகு வைக்கப்பட்ட தாலியை கணவன் மீட்டு தாராததால், மனைவி அவரை காய் வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூ வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்ளின் பிரிட்டோ. 35 வயதான இவர்,

பீளமேடு பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவருக்கும், கரோலின் என்ற 31 வயது பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் பிராங்ளின் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதன் காரணமாக தன் மனைவியின் தாலிச் செயினை பிராங்ளின் அடகு வைத்துள்ளார். இது தொடர்பாக கணவன் மற்றும் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது.

அடகு வைத்த நகையை மீட்டு தர வேண்டுமென்று கரோலின் கணவரிடத்தில் சண்டை போட்டுள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில் கணவர் பிராங்ளினை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பிறகு, காய்கறி வெட்டும் போது, கத்தி தெரியாமல் பட்டு விட்டதாக பிராங்ளினை கரோலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், ஏற்கெனவே பிராங்கிளின் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

இருப்பினும் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் நடத்திய விசாரணையில் கரோலின் கோபத்தில் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த தமிழன் பழனியின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

அம்மு

கூட்டு துஷ்பிரயோகம் செய்து இடுப்பு உடைக்கப்பட்டு விஷ ஊசி செலுத்தி இளம்பெண் கொடூர கொலை: உ.பி-யில் தொடரும் துயரம்

அம்மு

காரில் ஏசி போட்டுவிட்டு தூங்குபவரா நீங்கள்? இது உங்கள் உயிரையே பறிக்கும்

அம்மு