இந்தியா

திருமணம் ஆன 3 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் தம்பதி! மனைவி எழுதி வைத்திருந்த கடிதம்

தமிழகத்தில் திருமணம் ஆன மூன்றே மாதத்தில் இளம் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே மல்லியூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரும் நாமக்கல் மாவட்டம் தோக்கவாடியை சேர்ந்த ரம்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு இந்த தம்பதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து வழக்கம் போல் நேற்று இளங்கோவன் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் உள்ளே மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன் பின், மனைவி இறந்த துக்கத்தால் மனமுடைந்த இளங்கோவன், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

தம்பதி இறந்து கிடந்த வீட்டில், ரம்யா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாக ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பெண்கேட்டுத் தரவில்லை! வீட்டில் வந்து பெண்ணைத் தூக்கிய 5 பேர்… உடைந்த காலுடன் மறைத்து வைத்த கொடுமை

அம்மு

மனைவி பக்கத்து வீட்டுக்காரருடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட கணவன் செய்த செயல்! இந்தியாவில் பயங்கரம்

அம்மு

மனைவிக்கு திருமணத்தை மீறிய தகாத உறவு: 2 மகன்களை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை முயற்சி

அம்மு