உலகம்

கொரோனா தடுப்பு மருந்து…. ரஷ்யா அதிபர் புடின் தனக்கு தானே செலுத்த இருப்பதாக தகவல்!

ரஷ்யா அதிபர் புடின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னை, ரஷ்ய அதிபர் புடின் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், மூன் ஜே இன்னை சந்திப்பதற்கு முன் புடின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்த இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து முதல் தடுப்பு மருந்தைத் தயாரித்தது. இதற்கு ஸ்புட்னிக்-5 எனப் பெயரிட்டு கடந்த மாதம் பதிவு செய்தது.

மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் ரஷ்யா அதிபர் புடின் செலுத்தினார்.

ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவித்தது.

ரஷ்யாவில் கொரோனாவால் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 11,59,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

அவர்களைக் கொன்று நாக்கு துண்டிக்க வேண்டும்: ஜேர்மனியில் சிக்கிய ஐ.எஸ் தீவிரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்

அம்மு

பொலிசாரின் துன்புறுத்தல்… குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்: 27 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்த உண்மை

அம்மு

ரகசியமாக ஒன்லைனில் ரசாயன ஆயுதம் வாங்க முயன்ற கனேடிய இளம்பெண்: ஆனால் அவருக்கு தெரியாத உண்மை!

அம்மு