இந்தியா

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண்ணின் தந்தைக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்த போன் அழைப்பு! அதில் காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் கணவர் குடும்பத்தார் அவரை கொலை செய்து விட்டதாக பெண்ணின் தந்தை கண்ணீருடன் கூறியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஜரப்பாவை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மகள் சோனம் குமாரிக்கும் சாய்நாத் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சோனம் தற்கொலை செய்து கொண்டதாக வினோத்குமாருக்கு நள்ளிரவில் தகவல் வந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், திருமணமான ஒரு மாதத்தில் இருந்து ரூ 2 லட்சம் மற்றும் பைக் வரதட்சணையாக வேண்டும் என சாய்நாத் மற்றும் அவர் குடும்பத்தார் என் மகள் சோனமை கொடுமைப்படுத்த துவங்கினர்.

சில தினங்களுக்கு முன்னர் எனக்கு போன் செய்த சாய்நாத் வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் உங்கள் மகனை கொன்றுவிடுவேன் என மிரட்டினார்.

அதே நாளில் நள்ளிரவு 12 மணிக்கு சாய்நாத்தின் மூத்த சகோதரர் எனக்கு போன் செய்து உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார் என கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அங்கு சென்ற போது என் மகள் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்தார்.

என் மகளை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் தான் கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளார்.

இது தொடர்பான புகாரையடுத்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தையை எரித்த தாய்!.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்

அம்மு

பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து.. உரிமையாளர் உட்பட பலர் உடல் சிதறி பலி

அம்மு

வசதியான குடும்ப பெண்! செல்போன் டவரை வைத்து காட்டுப்பகுதியில் மனைவியை தேடி சென்ற கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

அம்மு