17.7 C
Manchester
3 July 2022
Image default
உலகம்

பிரித்தானியாவின் மிகப்பெரிய ஜாக்பாட்டை அள்ளிய தம்பதி: பரிசு கிடைத்ததும் மனைவிக்கு சொல்லாமல் கணவர் செய்த செயல்

பிரித்தானியாவில் 600,000 மதிப்புடைய வீட்டில் வாழும் தம்பதியருக்கு EuroMillions லொட்டரியில் மிகப்பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளது.

இங்கிலாந்திலுள்ள Cotswolds என்ற இடத்தில் வாழும் Joe (49)மற்றும் Jess Thwaite (46) தம்பதியருக்கு லொட்டரியில் 184 மில்லியன் பவுண்டுகள் பரிசாகக் கிடைத்துள்ளது.

தம்பதியருக்கு எட்டு வயதில் இரட்டைக் குழந்தைகளும், Joeவுக்கு முந்தைய திருமணத்தில் பிறந்த பல்கலையில் பயிலும் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

தம்பதியருக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. Joe பொறியாளராக பணி புரிகிறார், Jess சலூன் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதிகாலையில் எழுந்த தனக்கு லொட்டரியில் பரிசு விழுந்திருப்பதை தேசிய லொட்டரி ஆப் மூலம் தான் தெரிந்துகொண்டதாக தெரிவிக்கும் Joe, தனக்கு பரிசு விழுந்த விடயத்தைக் கூறுவதற்காக தன் மனைவியை எழுப்பவில்லை என்றும் உடனடியாக வீடு வாங்கும் திட்டத்துடன் இணையத்தில் வீடுகளைத் தேடத் துவங்கிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

அதற்குப் பிறகு காலையில் Jess எழுந்ததும் Joe சொன்னதை நம்பவே இல்லையாம். பிறகு லொட்டரி நிறுவனத்தை தொலைபேசியில் அழைத்து உறுதி செய்துகொண்ட பிறகே இருவருக்குமே தங்களுக்கு மிகப்பெரிய தொகை ஒன்று பரிசாக கிடைத்திருப்பதை நம்ப முடிந்ததாம்.

அவ்வளவு பெரிய தொகை பரிசாகக் கிடைத்தும், தம்பதியர் இன்னமும் சாதாரணமாகவே இருக்கிறார்கள். வழக்கமான வேலைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிரித்தானியாவின் மிகப்பெரிய ஜாக்பாட்டை அள்ளிய தம்பதி: பரிசு கிடைத்ததும் மனைவிக்கு சொல்லாமல் கணவர் செய்த செயல்

பிரித்தானியாவின் மிகப்பெரிய ஜாக்பாட்டை அள்ளிய தம்பதி: பரிசு கிடைத்ததும் மனைவிக்கு சொல்லாமல் கணவர் செய்த செயல்

பிரித்தானியாவின் மிகப்பெரிய ஜாக்பாட்டை அள்ளிய தம்பதி: பரிசு கிடைத்ததும் மனைவிக்கு சொல்லாமல் கணவர் செய்த செயல்

பிரித்தானியாவின் மிகப்பெரிய ஜாக்பாட்டை அள்ளிய தம்பதி: பரிசு கிடைத்ததும் மனைவிக்கு சொல்லாமல் கணவர் செய்த செயல்

 

Related posts

ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் பெண் வீராங்கனைகளை அவமானப்படுத்துவதற்காக என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்…

SudarSeithy

புடினின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் யாருக்கும் அறிந்திராத திடுக்கிடும் தகவல்!

SudarSeithy

வாடகை செலுத்தவும் பணமில்லை: பிரித்தானியாவில் சிக்கிக்கொண்ட ரஷ்ய கோடீஸ்வரர்

SudarSeithy