செய்தி

காலையில் ஆஜரான சுமனரத்ன தேரருக்கு முற்பகலில் பிணை!

இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய மங்களாராமய விகாரையின் விகாராதிபதி சர்ச்சைக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் வைத்து தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவரை மிரட்டிய குற்றச்சாட்டில் தேரரை விசாரணைக்காக ஆஜராகும்படி அண்மையில் அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இதற்கமைய அவர் இன்று தனது சட்டத்தரணியுடன் மன்றில் ஆஜராகினார்.

இந்நிலையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட எச்சரிக்கையின்பின் அவருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதேவேளை சுமனரத்ன தேரர் ஒரு முஸ்லிம் சட்டத்தரணியூடாக மன்றில் ஆஜராகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் இன்று மட்டக்களப்பு மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரர் உட்பட 3 ஆஜராகியிருந்தனர்.

இந் நிலையில் அவர்களை 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுமணரத்தன தேரர் உள்ளிட்டவர்களை எதிர்வரும் நவம்பர் 27 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

200 கடல் மைலுக்கு அப்பால் எண்ணெய் கப்பலை நகர்த்துங்கள்: சட்டமா அதிபர்!

அம்மு

கூட்டமைப்பின் கோட்டை எம் வசம்; தமிழரின் மனதை வென்றுவிட்டோம்! கடமைகளை பொறுப்பேற்ற பின் மஹிந்த

அம்மு

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

அம்மு