செய்தி

யாழில் 50 வருடங்களுக்கும் மேலாக பாவனையில் இருந்த வீதி மாயம்!

குறித்த சம்பவம் சண்டிலிப்பாய் ஜே 143 பகுதியில் 50 வருடங்களுக்கும் மேலாக மக்களின் பயன்பாட்டிலிருந்த பாதையை தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் மூடியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த வீதியை நம்பியிருக்கும் 22 குடும்பங்கள் பாதை இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவில் புனரமைப்பு செய்யப்பட்ட குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் அரசியல் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

குறித்த வீதியை போக்குவரத்திற்காக 22 குடும்பங்கள் பயன்படுத்தும் நிலையில், ஒரு கூட்டம் தமது தனிப்பட்ட காரணங்களுக்காக வீதியை மூடி அடைத்துள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் தமது வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் அந்தரிக்கின்றனர்.

இது தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தவிசாளர் பொலிஸாருடன் மணிக்கணக்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அத்துடன் பாதையை தற்காலிகமாகத் திறப்பதற்கு ஒத்துழைக்குமாறு கேடுக்கொண்டபோதும் பொலிஸார் நடந்து கொண்ட விதம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த வீதியை கபூட்டுவதற்கும் பொலிஸாரும் உடந்தையாக இருந்தார்களா என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கருணா – பிள்ளையானை கைது செய்ய வேண்டும்! வலுவடையும் எதிர்ப்பு

அம்மு

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து! இராணுவ தளபதியின் முக்கிய அறிவிப்பு

அம்மு

இதுதான் எனது முடிவு: பகிரங்கமாக அறிவிக்க தயாராகிறார் மணிவண்ணன்!

அம்மு