செய்தி

குழந்தைகளுக்கான டயபர்களில் விஷப்பொருள்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி

குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் டயபர்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப்பொருள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைக்குபிறந்த சிசுவில் இருந்து எல்லா சிறுகுழந்தைகளுக்கும் டயபர் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு சிலர் நாள் முழுவதும் குழந்தைகளுக்கு டயபரை அணிவித்திருப்பர்.

அவர்களைப் பொறுத்தவரை டயபரினை அணிவிப்பதே சுத்தம் மற்றும் ஆரோக்கியம் என்று கருதுகின்றனர். ஆனால் அவை உண்மை இல்லை.

தற்போது அவை குழந்தையின் உடல்நலத்திற்கும், சுற்றுசூழலுக்கும் பெருத்த கெடுதலை உண்டாக்கக் கூடிய மிகப்பெரிய‌ எதிரியாக மாறியுள்ளது.

இது தொடர்பில் டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் குழந்தைகள் பயன்பாட்டிற்கு விற்கப்படும் டயபரில் ‘ப்தலேட்’ எனப்படும் விஷப்பொருள் கலந்திருப்பதனை கண்டறிந்துள்ளது.

இவை குழந்தைகளின் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது ப்தலேட் எனப்படும் வேதிப்பொருள் கலந்த டயபரை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டயபரில் ப்தலேட் வேதிப்பொருள் கலப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ப்தலேட் கலந்த டயபர்களுக்கு இந்தியாவில் மட்டும் தடை விதிக்கப்படவில்லை. இதனால் குழந்தைகளுக்கு டயபரை பயன்படுத்தும்போது ப்தலேட் வேதிப்பொருள் எளிதில் உடலுக்குள் செல்லும் ஆபத்து குறித்தும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்

அம்மு

கஜேந்திரகுமாருக்கு அழைப்பு ஏற்படுத்த முடியவில்லை; தேசியப்பட்டியலை வன்னிக்கு வழங்குங்கள்: முன்னணிக்குள் ஆரம்பித்தது கதிரை சண்டை!

அம்மு

தொடருந்தில் பயணம் செய்யும் அரச, தனியார் பணியாளர்களுக்கு ஓர் அறிவித்தல்

அம்மு