செய்தி

தமிழரசு கட்சிக்குள் இரட்டைவேடம் போடுபவர்கள் அகப்பட்டனர்!

கடந்த தினங்களில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் ஒன்றுசேர்ந்து, நினைவேந்தல் தடைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தியதுடன், கதவடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில் அதனை குழப்ப துணைக்குழு தலைவர்கள் திலீபன் தொடர்பில் எதிர்மறையாக கருத்து தெரிவித்து வந்ததுடன், அதன் உறுப்பினர்கள் எதிர்ப்பு நடடிக்கையிலும் ஈடுபட்டனர்.

எனினும், அவர்களின் இந்த சில்லறைத்தனமான பொருட்படுத்தாத மக்கள் கதவடைப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நினைவேந்தல் தடைக்கு எதிராக ஒன்று சேர்ந்த தமிழ் கட்சிகள் இன்று மீண்டும் ஒன்று கூடுகின்றனர்.

நினைவேந்தல் விவகாரத்தில் 10 தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்திருந்தாலும், அதில் குறிப்பிட்ட ஒரு சில தரப்பினரே செயற்பட்டிருந்தனர்.

இதேவேளை 10 கட்சிகளில் ஒன்றான தமிழ் தேசிய பசுமை இயக்கம் உண்ணாவிரதம் மற்றும் அதன் பின்னரான எந்த செயற்பாட்டிலும் பங்கேற்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அதேபோல மற்றைய கட்சிகள் சார்பில் சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் தவிர்ந்த ஏனைய எந்த எம்.பிக்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அனைத்து எம்.பிக்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும், போராட்டத்தில் கலந்து கொள்ளாமலிருப்பதற்காகவே அவர்கள் கொழும்பில் தங்கியிருந்ததாக தெரியவருகிறது.

இந்நிலையில் தனது அறிக்கைகளில் தலைவர் வே.பிரபாகரனை தம்பி என அடிக்கடி விளிக்கும், க.வி.விக்னேஸ்வரன், விடுதலைப் புலிகள் தொடர்புடைய எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமலிருப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனடிப்படையில் நினைவேந்தல் தடைக்கு எதிரான எந்த போராட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல எம்.ஏ.சுமந்திரன் தரப்பும் போராட்டத்தை ரசிக்கவில்லை. அம்பாறையில் நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் பகிரங்கமாக கேட்டதால், கதவடைப்பிற்கு அழைப்பு விடுக்க வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டது எனினும், சுமந்திரன் தரப்பில் யாருமே இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாததுடன் போராட்டத்தை ஆதரிக்கவுமில்லை.

அத்துடன் தியாகி திலீபனை அஞ்சலிக்கும் உரிமைக்காக போராட்டம் நடத்துவதை சுமந்திரன் தரப்பிலுள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் கே.சயந்தன், ச.சுகிர்தன் மற்றும் பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டு, தற்போது சுமந்திரன் அணியில் செயற்பட்டு வரும் தி.பிரகாஷ் உள்ளிட்டவர்கள் யாரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=3291149975&adf=2008451809&w=560&fwrn=4&fwrnh=100&lmt=1601478785&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2445088797&psa=1&guci=2.2.0.0.2.2.0.0&ad_type=text_image&format=560×280&url=https%3A%2F%2Fwww.jvpnews.com%2Fpolitics%2F04%2F287402&flash=0&fwr=0&pra=3&rh=140&rw=560&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&adsid=ChEI8NnQ-wUQ6eb3jKKVp9XNARJLAFkVA7RaF3bpIAiCWiLBmidZt4hK8clwenBCYs1rhtKdvpLi9Y7DaG5ePB1ejCulIdmEfo44pTPTKiQo6nc1a1gUHhySqjsnr0_6&dt=1601478764733&bpp=2&bdt=1992&idt=3&shv=r20200924&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D98c37c179146403c%3AT%3D1590052942%3AS%3DALNI_MYeTF2zwFJHQgus4s8-cjEPP-dqog&prev_fmts=0x0%2C160x600%2C560x280&nras=3&correlator=8123906691672&frm=20&pv=1&ga_vid=663752086.1590052942&ga_sid=1601478764&ga_hid=498228024&ga_fc=0&iag=0&icsg=2262794966182016&dssz=46&mdo=0&mso=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=410&ady=2081&biw=1349&bih=657&scr_x=0&scr_y=0&eid=42530672%2C182984100%2C182984300%2C21066467&oid=3&psts=AGkb-H_5GwD0wmmNXIjU9HwV0NCRjoHdFEHvn9zJ3i22cwLXydN6BH0ywa3bG_wwiNgQ_V2guknKS47G&pvsid=3213344914443541&pem=6&ref=https%3A%2F%2Fwww.jvpnews.com%2F&rx=0&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C0%2C0%2C1366%2C657&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=31&jar=2020-09-30-07&ifi=3&uci=a!3&btvi=2&fsb=1&xpc=Po3S1H68EU&p=https%3A//www.jvpnews.com&dtd=20357

இவ்வாறான நிலையில் தென்மராட்சியில் போராட்டம் நடந்தும், தமிழ் அரசு கட்சியின் சாவகச்சேரி கிளை தலைவர்கூட போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் பொதுமக்களிடம் தம்மை தேசியவாதிகளாக காண்பித்துக் கொண்டு, யதார்த்தத்தில் அதற்கு மாறாக நடக்கும் சொந்தக்கட்சிக்காரர்கள் பற்றி இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஆராயப்படலாமென தெரிகிறது.

இப்படி இரட்டைவேடம் போடுபவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதால், கட்சி கட்டமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் , அதனை சக கட்சிகளிற்கு இன்றைய கூட்டத்தில் அறிவிக்கலாமெனவும் , அதுபோலே, ஏனைய கட்சிகளிலும் நடவடிக்கையெடுக்க அவர் கேட்டுக்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

அங்குலானை பிரதேசத்தில் குவிக்கப்பட்ட அதிரடிப்படை!

அம்மு

இலங்கையில் மீண்டும் கொரோனா – பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அம்மு

ஒரு லட்சம் பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் திட்டம் ஆரம்பம்! ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு

அம்மு