19.9 C
Manchester
7 July 2022
Image default
இந்தியா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி; கைலாச அதிபதி நித்தியின் புதிய அறிவிப்பு!

சர்ச்சை சாமியாரான நித்தியானாந்தா கைலாசாவுக்கு ரூ 2000 கோடி தங்கக் கட்டிகளுடன் சென்றதாகவும் அந்த தங்கத்தை அமெரிக்காவில் ஒரு வங்கியில் வைத்திருந்ததாகவும் அதை நித்திக்கு நம்பிக்கையாக இருந்த சிஷ்யர்கள் கூட்டம் ஏமாற்றிவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் அதிர்ச்சியில் நித்யானந்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. அதை உண்மை என நிரூபிப்பதுபோன்று கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு நித்யானந்தா லைவ் வீடியோவில் தோன்றாமல் இருந்து வருகிறார்.

இதனையடுத்து நித்தியானந்தா இறந்துவிட்டார் என பரவலாக பேசப்பட்ட ரிலையில், இல்லை திரும்பி வந்துட்டேன் என “கண்ணீர் அஞ்சலி” போஸ்டர் ஒட்டிய நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து தொடர் பேஸ்புக் பதிவுகளை போட்டு வந்தார். அவரது பதிவில், தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை. 20 நிமிடங்கள் சேர்ந்தாற்போல் தூங்க முடியவில்லை என்றெல்லாம் கூறிவந்தார். அதுமட்டுமல்லாது தன்னை சுற்றி 27 மருத்துவர்கள் இருப்பதாகவும் தன்னை கீழே படுக்க வைத்து மூச்சுவிட கட்டாயப்படுத்துவதாகவும் செயற்கை சுவாசத்தின் வாயிலாக சுவாசித்து வருவதையும் கூறியிருந்தார்.

இதனையடுத்து அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார், இந்தியா வரபோகிறார், அவருக்கு கல்லீரலில் பிரச்சினை என்றெல்லாம் கூறப்பட்டது. அதோடு நித்தி குறித்து பேஸ்புக்கில் எந்த போஸ்ட்டுகளும் கடந்த சில நாட்களாக இல்லை. இதனால் மீண்டும் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவின. இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு ஒரு பேஸ்புக் பதிவை நித்தி வெளியிட்டிருந்தார்.

அதில் , கைலாசாவாசிகளே, சமாதி நிலை 5 வகைப்படும். அவற்றில் முதல் நிலை சுசுப்தி- இது ஆழ்ந்து தூங்கும் நிலை, 2. ஸ்வப்னா- கனவு நிலை, 3. ஜெக்ரத்- விழித்திருக்கும் நிலை, 4. துரியா- சுயநினைவு நிலையில் மகா கைலாசத்தை உணருதல், 5. துரியாதிதா- உயிருடன் இருக்கும் நிலை. நான் தொடர்ந்து துரியாதிதா நிலையில் இருந்து வருகிறேன்.

உங்களது பிரார்த்தனைகள் கைகூடியுள்ளது. தினந்தோறும் நித்ய சிவ பூஜையின் போது நான் ஜக்ரத் நிலை அதாவது விழித்திருக்கும் நிலையில் இருப்பேன். மேற்கண்ட 5 நிலைகளும் எனக்கு அவ்வப்போது ஏற்படுகின்றன. இதைத்தான் சகஜ சமாதி என்பார்கள்.

உங்களுக்கு ஒரு நற்செய்தி- என்னால் சரளமாக பேச முடிகிறது. நான் சமாதி நிலையில் இருந்த போது நடந்த அனைத்து சம்பவங்களும் என்னை சுற்றியிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டன.

சகஜ சமாதிக்கு வந்துவிட்டால் இனி நான் வழக்கமாக சத்சங்கங்களை நடத்துவேன். அதோடு ஆன்மீக வகுப்புகளையும் மேற்கொள்வேன். அனைவருக்கும் நன்றி என நித்யானந்தா தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related posts

விண்வெளிக்கு சென்று வந்த 3-வது இந்திய பெண்! அனுபவத்தை பகிர்ந்த ஸ்ரீஷா பாண்ட்லா

SudarSeithy

தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணமகள்! மணமகன் குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி

SudarSeithy

கொழுந்தன் கேட்ட கேள்விகள்! ஆத்திரத்தில் கத்தியால் குத்தியும், வெந்நீர் ஊற்றியும் கொன்ற அண்ணி… அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

SudarSeithy