இந்தியாவின் பெங்களூரில் மனைவிக்கு ஏற்பட்ட முதுகுவலியால், கணவனுக்க 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக கிடைத்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த விசித்திர சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
“பெங்களூரு பலகெரேயை சேர்ந்த ஒருவர், கடந்த ,2011-ம் ஆண்டு வொஷிங் மெஷின் ஒன்றினை கொள்வனவு செய்திருந்தார்.
வொஷிங் மெஷினை கொள்வனவு செய்துபோதே, அதன் விலையிலிருந்து அதிகப்படியாக ரூ.5 ஆயிரம் செலுத்தி, மேலதிகமாக 2 ஆண்டுக்கு உத்தரவாதத்தையும் அவர் கூடுதலாக பெற்றிருந்தார்.
இந்நிலையில், உத்தரவாத காலம் இருக்கும் போதே வொஷிங் மெஷின் பழுதானது. அதனை பழுது பார்த்து கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் குறித்த நபர் கோரியிருந்தார். எனினும் பழுதுப் பார்ப்பதற்காக வந்த நபர் அதனை புகைப்படம் மட்டுமே எடுத்து சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் உத்தரவாத காலம் இருந்தும், சலவை இயந்திரத்தை திருத்துவதற்கு குறித்த நிறுவனத்திடம் இருந்து யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் பெங்களூருவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.
அதில், ” சலவை இயந்திரம் (வொஷிங் மெஷின்) பழுதானதால் எனது மனைவி துணிகளை தொடர்ந்து தனது கையால் துவைத்ததால் முதுகுவலி உண்டானது. இதற்கு சிகிச்சை பெற்றதற்காக ரூ.2 இலட்சம் உட்பட ரூ.3 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், உத்தரவாதம் இருந்தும் வொஷின் மெஷினை நீக்காததால், பாதிக்கபட்டவருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படி வொஷின் மெஷின் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகின்றது.