முன்னாள் அமைச்சர் ரிக்ஷாட் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி கோரி, மலையக இளைஞன் ஒருவர், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார்.
குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக , இந்த போராடத்தை முன்னெடுத்துள்ளார்.
ரிசாட்டின் வீட்டில் ஏற்கனவே 3க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசாங்கமானது பெண்களை பாதுகாக்கும் செயற்பாட்டு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என குறித்த இளைஞன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மாணிக்கக் கல் பற்றி கதைப்பதை நிறுத்தி விட்டு, மகளீரை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.