இன்றைய பஞ்சாங்கம்
20-06-2022, ஆனி 06, திங்கட்கிழமை, சப்தமி திதி இரவு 09.02 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 04.35 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பின்இரவு 04.35 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிபலன் – 20.06.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சினைகள் தோன்றும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கடகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
சிம்மம்
இன்று பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.
கன்னி
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களால் அனுகூலங்கள் கிட்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். வண்டி, வாகனங்கள் மூலம் வீண்செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் வீண் விரயங்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் உண்டாகும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களை தரும்.
தனுசு
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மகரம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்குள் சிறு சிறு இடையூறுகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
12 comments
dissertation handbook https://professionaldissertationwriting.org/
writing your dissertation in https://professionaldissertationwriting.com/
doctoral dissertation writing assistance https://helpwithdissertationwritinglondon.com/
dissertation handbook https://dissertationwritingcenter.com/
help-seeking dissertation https://dissertationhelpexpert.com/
help with dissertations https://accountingdissertationhelp.com/
writing your doctoral dissertation https://examplesofdissertation.com/
writing services https://writing-a-dissertation.net/
dissertation search https://bestdissertationwritingservice.net/
dissertation editing services https://customdissertationwritinghelp.com/
writing a master’s dissertation https://writingadissertationproposal.com/
doctoral dissertation writing help https://dissertationhelpspecialist.com/
Comments are closed.