தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வேடசந்தூர் பொலிஸ்நிலையத்தில் நேற்று முறைப்பாடு ஒன்றை அளித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வேடசந்தூர் அருகே கிரியம்பட்டியில், குடகனாற்றுக்கு குறுக்கே உள்ள வெங்கட்டராமன் அய்யங்கார் அணைக்கட்டில் இருந்து செல்லும் பாசன வாய்க்கால் மற்றும் லட்சுமணம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் இடதுபுற நீர்பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயுள்ளதாக விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்த போதிலும், எவ்வித பயனும் இல்லாத காரணத்தால் வாய்க்கால்களை கண்டுபிடித்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணறை காணவில்லை நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்பட காட்சிபோல, விவசாயிகள் முறைப்பாடளித்த அளித்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது